Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவிற்கு விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் திமுகவினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரான்ஸில் சாலையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அகற்றப்பட்டனரா? உண்மை என்ன?
பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அஞ்சலி போஸ்டர் அடித்த திமுகவினர் என்கிற புகைப்படத்தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இயற்கை எய்தினார். இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல்கட்சித் தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு ஆறுதல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு திமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதனை ஆராய்ந்தோம்.
அப்போது, வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் அஞ்சலி போஸ்டரில் கட்சி பெயர் குறிப்பிடப்படாமல், “திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி – விழுப்புரம் தெற்கு மாவட்டம்” என்று வாசகம் அமைந்திருந்தது. அதன் நிறமானது, திமுகவின் கருப்பு-சிவப்பு நிறத்தை ஒத்திருந்தது.
எனவே, இதுகுறித்து நாம் மேலும் ஆய்வு செய்தபோது விழுப்புரம் மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட பாஜக தலைவரான கலிவரதன் என்பவரது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட அஞ்சலி போஸ்டர் குறித்த புகைப்படங்கள் மற்றும் செய்தி இடம்பெற்றிருந்தது. பாஜக கட்சி சார்ந்த வண்ணங்களில் அந்த அறிவிப்பு இடம்பெற்ற நிலையில், வைரல் புகைப்படத்தில் அதன் வண்ணம் கருப்பு-சிவப்பாக தெரியும் வகையில் மாற்றப்பட்டிருந்தது நமக்கு உறுதியானது.
குறிப்பிட்ட அஞ்சலி போஸ்டர் வைரலாகியதைத் தொடர்ந்து, திமுக ஐடி விங்கின் ஒரு பிரிவான ITWFactcheck ட்விட்டர் பக்கத்தில், ”குறிப்பிட்ட வைரல் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது, திமுக சார்பில் அடிக்கப்பட்டதல்ல; உண்மையில் இது பாஜக சார்பில் அடிக்கப்பட்ட போஸ்டராகும்” என்று விளக்கமளித்துள்ளனர்.
Also Read: எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அழித்தனரா சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்?
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவிற்கு விழுப்புரம் திமுகவினர் அஞ்சலி போஸ்டர் அடித்ததாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook post, from Vat Kalivaradhan Exmla Bjp, On December 30, 2022
Twitter post, from DMK ITWing, Dated December 30, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)