திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

HomeFact CheckViralதாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டாரா பிரதமர்...

தாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டாரா பிரதமர் மோடி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலையை பிரதமர் மோடி மொட்டை அடித்துக் கொண்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from twitter @JanakiLRaman5

இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 30, 2022 அன்று காலமானார்.

இந்நிலையில், தாயின் மறைவைத் தொடர்ந்து இந்து மத முறைப்படி தலை மற்றும் முகத்தை மழித்துக் கொண்டுள்ளார் என்பதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Facebook/Kaavisingam
Screenshot from Facebook/ s.suresh.14606

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரப்பப்படும் பழைய படம்!

Fact Check/Verification

தாயின் மறைவிற்குப் பின் இந்து சமய முறைப்படி தனது தலைமுடியை மழித்துக் கொண்ட பிரதமர் மோடி என்று புகைப்படச் செய்தி பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்த உண்மையை அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

அதில், ஜீ பிசினஸில் வெளியான செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தின் உண்மைப் பிரதியான பிரதமர் மோடி தலைமுடி, மற்றும் தாடியுடன் இருக்கும் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.

மேலும், குறிப்பிட்ட தலைமுடி இல்லாத மோடியின் வைரல் புகைப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதையும் நம்மால் அறிய முடிந்தது.

தொடர்ந்து, தனது தாயின் மறைவிற்கு பிறகு டிசம்பர் 31, 2022 அன்று பிரதமர் மோடி பதிவிட்ட ட்விட்டர் புகைப்படத்தில் அவர் தலைமுடி மற்றும் தாடியுடனே காட்சியளிக்கிறார்.

மேலும், இன்று புதிதாக வெளியாகியிருக்கும் “PM Modi addresses 108th Indian Science Congress” என்கிற பிரதமரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்க வீடியோவிலும் அவர் தலைமுடி மற்றும் தாடியுடன் இருக்கிறார்.

இதுகுறித்த உண்மையறியும் சோதனையை நம்முடைய நியூஸ்செக்கர் இந்தி மற்றும் ஆங்கிலப் பதிப்பிலும் வெளியிட்டுள்ளோம்.

Also Read: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கணவருக்கு ஹெச்ஐவி தொற்று எனப்பரவும் பொய்ச்செய்தி!

Conclusion

தாயின் மறைவிற்குப்பின் இந்து சமய முறைப்படி தனது தலைமுடியை மழித்துக் கொண்ட பிரதமர் மோடி என்று பரவிய புகைப்படம் எடிட் செய்யப்பட்டது மற்றும் செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Media

Sources
 Zee Business report, April 30, 2018
Economic Times report, December 16, 2017
Youtube Link, Dated January 03, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular