வெள்ளிக்கிழமை, மே 10, 2024
வெள்ளிக்கிழமை, மே 10, 2024

HomeFact Checkநடிகர் விஜய்க்கு கிஸ் கொடுத்த ரசிகர்கள் என்று பரவும் கன்னட நடிகர் துனியா விஜய் வீடியோ!

நடிகர் விஜய்க்கு கிஸ் கொடுத்த ரசிகர்கள் என்று பரவும் கன்னட நடிகர் துனியா விஜய் வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: நடிகர் விஜய்க்கு முத்தமிட்ட ரசிகர்கள்
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

நடிகர் விஜய்க்கு கிஸ் கொடுத்த ரசிகர்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“என்னடா இது வருங்கால முதல்வருக்கு வந்த சோதனை.மவுத் கிஸ் லாம் அடிக்கீறீங்க!. இதே திரிஷா வா இருந்தா தளபதி கிஸ் அடிச்சுருப்பாரு. மெண்டாலன் ரசிகர்கள் எவ்ளோவோ தேவலாம் போல. ” என்று இந்த வீடியோ வைரலாகிறது.

நடிகர் விஜய்க்கு கிஸ்
Screenshot from X @imUmasankar19

Archived Link

Screenshot from x @GhostdrPhd

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்றாரா சீமான்?

Fact Check/Verification

நடிகர் விஜய்க்கு கிஸ் கொடுத்த ரசிகர்கள் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைத் தொடர்ந்து அவருடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தபோது இவ்வாறு அவர் ரசிகர்களுடன் ஸ்வீட் ஊட்டிக்கொண்டதாக எந்த நிகழ்வும் இடம்பெற்றிருக்கவில்லை.

எனவே, வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், NammaKFI, News18 கன்னடா உள்ளிட்ட கன்னட சேனல்கள் வெளியிட்டிருந்த நடிகர் துனியா விஜய் 50வது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோக்கள் கிடைத்தன.

அதில், ரசிகர் ஒருவர் அவருக்கு முத்தமிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பிட்ட வீடியோவே தற்போது நடிகர் விஜய்க்கு முத்தமிட்ட ரசிகர்கள் என்று பரவி வருகிறது.

 Also Read: KT ராகவன் காலில் விழுந்த அண்ணாமலை என்று பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

நடிகர் விஜய்க்கு கிஸ் கொடுத்த ரசிகர்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video from, News 18 Kannada, Dated January 20, 2024
YouTube Video From, NammaKFI, Dated January 20, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular