Claim: எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
“இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை விமர்சித்திருந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனதுபேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!
Fact Check/Verification
எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி டிவி பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆராய்ந்தோம். அப்போது, “இந்த செய்தியை தந்தி டிவி பதிவிடவில்லை” என்றும், குறிப்பிட்ட நியூஸ்கார்ட் போலியானது என்றும் தந்தி டிவி தரப்பில் பதிவிடப்பட்டிருந்தது.
எனவே, பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று இதன்மூலமாக தெளிவாகிறது.
Also Read: நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
Conclusion
எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook Post From, Thanthi Tv, Dated September 20, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)