Fact Check
Fact Check: முட்டையை செயற்கையாகத் தயாரிக்கும் தொழிற்சாலை என்று பரவும் பொம்மை தயாரிப்பு நிறுவன வீடியோ!
Claim
முட்டை தயாரிக்கும் தொழிற்சாலை.
Fact
பரவும் வீடியோ உண்மையில் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கப்பட்டதாகும்.
முட்டையை செயற்கையாகத் தயாரிக்கும் தொழிற்சாலை என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

“முட்டைத் தொழிற்சாலை” என்பதாகப் பரவும் இந்த வீடியோ கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்தே பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
முட்டையை செயற்கையாகத் தயாரிக்கும் தொழிற்சாலை என்று பரவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற நிலையில் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சீனமொழி செய்திக்கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், வைரலாகும் வீடியோவில் இருப்பவை உண்மையான முட்டைகள் அல்ல;குழந்தைகளுக்கான ஸ்லைம் வகை விளையாட்டு முட்டைகள் என்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. Nanjing Public Security Bureau இவை பொம்மை முட்டைகள் என்று விளக்கமளித்துள்ளதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஈ-காமர்ஸ் இணையதளங்களில் விற்கப்படும் இந்த பொம்மைகளில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள அதே ஸ்டிக்கர்கள் இடம்பெற்றுள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த, மேலும் சில சீனாவின் செய்திக்கட்டுரைகளை இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.
பிளாஸ்டிக் முட்டைகள் குறித்த செய்திகள் கடந்த சில வருடங்களாகவே பரவி வருகின்ற நிலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் FSSAI இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,”பிளாஸ்டிக் முட்டைகள் என்பவை கட்டுக்கதை. ஏனெனில், இயற்கையான முட்டை போன்ற அதே தரத்தில் முட்டைகளை செயற்கையாக தயாரிக்கும் செயல்முறைகள் எதுவும் நம்மிடையே இல்லை” என்று விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த விளக்கம், FSSAIஇன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்திலும் இடம்பெற்றுள்ளது.

Also Read: அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை மூலிகை எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
முட்டையை செயற்கையாகத் தயாரிக்கும் தொழிற்சாலை என்று பரவும் வீடியோ உண்மையில் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
News Report From, Sohu.com
FSSAI Myth Buster
FSSAI Guidelines
Finace.Sina.com
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.