Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ஈஃபிள் டவரில் பயங்கர தீவிபத்து
Fact: வைரலாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் AI மூலமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈஃபிள் டவரின் Elevator ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவால் அலாரம் அடித்ததைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
ஈஃபிள் டவரில் தீ பிடித்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ஈபிள் டவரில் தீப்பற்றியது! பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் ஈபிள் கோபுரத்தில் இன்று தீப்பற்றியது. இதையடுத்து அவசர நடவடிக்கையாக, சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கான பேர், பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.” என்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். செய்தி ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டு பின்னர் நீக்கிவிட்டன.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வாய்க்கால் இல்லாமல் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
ஈஃபிள் டவரில் தீ பிடித்ததாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தியில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை ஆராய்ந்தபோது FreePIK என்கிற புகைப்படங்களுக்கான இணையதளத்தில் AI Generated என்கிற தலைப்பில் பயன்பாட்டிற்காக இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்த வலைத்தளத்திலேயே AI மூலமாக உருவாக்கப்பட்டு இடம்பெற்றிருக்கும் பல்வேறு ஈஃபிள் டவர் தீ படங்களும் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும், மற்றொரு புகைப்படத்தை HIVE Moderation Tool மூலமாக ஆராய்ந்தபோது அது 98.9% AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

ஈஃபிள் டவரில் தீ என்று பரவும் வீடியோ கடந்த ஜூலை 2023ஆம் ஆண்டு Gor_cgi என்கிற கிராபிக் கலைஞரால் உருவாக்கப்பட்டு அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, ஈஃபிள் டவரில் உண்மையில் தீபிடித்ததா என்பது குறித்து ஆராய்ந்தபோது உள்ளூர் நேரம் காலை 10.50 மணியளவில் ஈஃபிள் டவரின் இரண்டாவது தளத்திற்கும் மேல் தளத்திற்கும் இடையிலான மின் தூக்கியில் ஏற்பட்ட மின் கசிவால் Fire Alarm ஒலியெழுப்ப ஆரம்பித்ததைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்களும் அங்கே வந்தடைந்தனர் என்று SETE நிறுவனம் (ஈஃபிள் டவர் நிர்வாகம்) USA Today செய்தி ஊடகத்திற்கு தெரிவித்துள்ளது. முறையான சோதனைகளுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் தளம் வரையில் ஈஃபிள் டவர் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 24, 2024 அன்று பாரிஸின் St. Lazare ரயில் நிலையம் அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பிடித்த காட்சிகளும் ஈஃபிள் டவர் என்பதாகவே பரவி வருகின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டு Parisians panic as technical fault with Bastille Day fireworks sends thick plumes of smoke up Eiffel Tower என்று ஈஃபிள் டவர் அருகே எழுந்த புகை குறித்த செய்தி வீடியோவும், கடந்த டிசம்பர் 2023ல் லண்டன் Blackpool டவரில் ஏற்பட்ட தீவிபத்து புகைப்படங்களும் கூட தற்போதைய நிகழ்வுடன் இணைத்து பரப்பப்பட்டு வருகின்றன.


ஈஃபிள் டவரில் தீயணைப்பு வீரர்கள் ஆய்வு நடத்தும் வீடியோ குளோபல் நியூஸ் உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதுகுறித்த மேலும் முறையான செய்தியை இங்கே, இங்கே படியுங்கள்.
ஈஃபிள் டவரில் தீ பிடித்ததாக பரவும் புகைப்படங்களும், வீடியோக்களும் கடந்த ஜனவரி மாதமே பரவியது குறிப்பிடத்தக்கது. ஈஃபிள் டவரின் அதிகாரப்பூர்வ பக்கத்திலோ, அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கங்களிலோ (X, Instagram, Facebook) தீவிபத்து ஏற்பட்டதாக எந்த செய்தியும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. Paris Fire Brigade அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இவ்வாறு ஈஃபிள் டவரில் பயங்கர தீவிபத்து என்று எந்த செய்தியும் இடம்பெற்றிருக்கவில்லை. ஈஃபிள் டவரின் இன்றைய காட்சியை இந்த நேரடி ஒளிப்பரப்பில் காணலாம்.
Also Read: உதயநிதி தன்னை ஒரு கிறிஸ்துவர் என்று பெருமையாக கூறியதாக பரவும் செய்தி உண்மையா?
ஈஃபிள் டவரில் தீ பிடித்ததாகப் பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Website of Eiffel Tower
Report from USA Today, Dated December 24, 2024
Report from HJ News, Dated December 24, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்