சனிக்கிழமை, ஜூலை 6, 2024
சனிக்கிழமை, ஜூலை 6, 2024

HomeFact Checkபாரிஸ் தேவாலயத்தில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?

பாரிஸ் தேவாலயத்தில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vasudha noticed the growing problem of mis/disinformation online after studying New Media at ACJ in Chennai and became interested in separating facts from fiction. She is interested in learning how global issues affect individuals on a micro level. Before joining Newschecker’s English team, she was working with Latestly.

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Pankaj Menon is a fact-checker based out of Delhi who enjoys ‘digital sleuthing’ and calling out misinformation. He has completed his MA in International Relations from Madras University and has worked with organisations like NDTV, Times Now and Deccan Chronicle online in the past.

Claim: பாரிஸ் தேவாலயத்தில் இருந்து கண்கவர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் காட்சி

Fact: வைரலாகும் வீடியோ இத்தாலி சர்ச் மற்றும் ஜெர்மனி இசைக்குழு வீடியோக்களை இணைத்து பரவுகிறது.

பாரிஸ் தேவாலயத்தில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”பாரிஸ் தேவாலயத்தில் இருந்து கண்கவர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் காட்சி” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @kijo_kettavan

X Link/Archived Link

Screenshot from X @stepup_media

X Link/Archived Link

Screenshot from x @aadaavaan

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

பாரிஸ் தேவாலயத்தில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி, பாரிஸ் உள்ளிட்ட கீ-வேர்டுகளால் தேடினோம். அப்போது, கிடைத்த கட்டுரையில் ““A few months before the opening of the Games, the Hellenic Olympic Committee holds a ceremony at the ancient site of the Olympic Games in Olympia, Greece. The flame is lit by the high priestess who, in front of the ruins of the temple of Hera, asks Apollo, the god of the sun, for help in lighting her torch with the sun’s rays caught on a parabolic mirror.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
மேலும், “The Olympic flame is then placed in an urn and brought to the ancient stadium by Hestiada (the priestess keeper of the fire), where it is handed over by the high priestess to the first torchbearer along with an olive branch—a universal symbol of peace.Thus begins the start of the Olympic Torch Relay…,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வருடத்திற்கான ஒலிம்பிக் ஜோதி நிகழ்வு ஏப்ரல் 16 அன்று நேரலை நிகழ்வாக இடம்பெற்றிருந்தது. பிரான்ஸ்24 வெளியிட்டிருந்த செய்தியில் ”பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தீபம் கீரீஸில் ஏற்றப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை 2ஆம் தேதி நிலவரப்படி ஒலிம்பிக் ஜோதி Nord Region-ல் உள்ளது. ஜூலை 3 நிலவரப்படி அது Somme பகுதியில் உள்ளது. ஒலிம்பிக் ஜோதி இன்னும் பாரிஸை வந்தடைந்திருக்கவில்லை. இதன்மூலம், ஒலிம்பிக் ஜோதி ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது; பாரிஸில் அல்ல என்பது உறுதியாகிறது.

வைரல் வீடியோவின் முதல்பகுதியைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது  Father  R. Vierling என்கிற கத்தோலிக்க மதகுரு வெளியிட்டிருந்த ஏப்ரல் 10, 2023 ஆம் ஆண்டு X பதிவு நமக்குக் கிடைத்தது. அதன்படி, இத்தாலியின் Florentine Easter Tradition நிகழ்வு அது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் குறிப்பிட்டிருந்தபடி  Scoppio del Carro என்கிற கீ-வேர்ட் மூலமாக தேடியபோது, வாத்து வடிவிலான ராக்கெட் ஒளியேற்றப்படும் வீடியோவும் கிடைத்தது.

Florence Tv வெளியிட்டுள்ள வீடியோவில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்வின் 2022ஆம் ஆண்டு காட்சி இடம்பெற்றுள்ளது.

கூகுள் மேப் தேடலிலும் நமக்கு குறிப்பிட்ட சர்ச்சின் புகைப்படம் கிடைத்தது. அது வீடியோவில் உள்ள சர்ச்சுடன் ஒத்துப்போனது.

தொடர்ந்து, வீடியோவின் இரண்டாவது பகுதியை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தபோது அது  Rammstein  என்கிற ஜெர்மன் இசைக்குழுவின் நிகழ்ச்சி வீடியோ என்பது நமக்கு உறுதியாகியது.

எனவே, இந்த இரண்டு வீடியோக்களை இணைத்து குறிப்பிட்ட வைரல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு உறுதியாகியது.

Also Read: பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதா?

Conclusion

பாரிஸ் தேவாலயத்தில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Official Website Of Olympics
YouTube Video By Olympics, Dated April 16, 2024
X Post By @father_rmv, Dated April 10, 2023
Visit Florence Website
Google Maps
YouTube Video By DMD, Dated June 11, 2024
Instagram Account Of @rammsteinofficial


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vasudha noticed the growing problem of mis/disinformation online after studying New Media at ACJ in Chennai and became interested in separating facts from fiction. She is interested in learning how global issues affect individuals on a micro level. Before joining Newschecker’s English team, she was working with Latestly.

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Pankaj Menon is a fact-checker based out of Delhi who enjoys ‘digital sleuthing’ and calling out misinformation. He has completed his MA in International Relations from Madras University and has worked with organisations like NDTV, Times Now and Deccan Chronicle online in the past.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular