Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தவெக தொண்டர்கள் மின்கம்பத்தில் கிரீஸ் பூசியதாக பரவும் படம்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தேன் என்று விஜய் கூறினாரா?
தவெக தொண்டர்கள் மின்கம்பத்தில் கிரீஸ் பூசியதாக பரப்பப்படும் படத்தை கூர்ந்து கவனிக்கையில் அப்படத்தில் இளைஞர்கள் வைத்திருந்த கொடியின் மத்தியில் தவெக சின்னங்களான இரட்டை யானை மற்றும் மலர் காணப்படவில்லை. அதேபோல் மின்கம்பங்கள் இரண்டும் அடுத்தடுத்து அருகில் இருந்தது; அதில் ஒன்று சாலையின் மத்தியில் இருந்தது.
இதையடுத்து படத்தில் காணப்பட்டவர்களின் முகங்கள், கண்கள் போன்றவற்றை பார்க்கையில் அவர்கள் உண்மையான மனிதர்கள் போல காணப்படவில்லை.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வைரலாகும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என உணர முடிந்தது. இதை உறுதிப்படுத்த செயற்கை நுண்ணறிவு படங்களை கண்டறிய உதவும் WasitAi இணையத்தளம் மூலம் வைரலாகும் படத்தை சோதித்தோம்.
அச்சோதனையில் வைரலாகும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது அல்லது எடிட் செய்யப்பட்டது என உறுதியானது.

Sources
WasitAi
Self Analysis
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
October 24, 2025
Ramkumar Kaliamurthy
November 26, 2025