Fact Check
தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நானே நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது என்றாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

தலைவி திரைப்படத்தை பார்த்த பிறகு, அதில் எம்.ஜி.ஆர் அவர்களின் வேடத்தில் நானே நடித்திருக்கலாம் என்று தோன்றியது என்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த “தலைவி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Also Read: உலகத் தலைவர்களின் அலங்கார மதிப்பீட்டில் பிரதமர் மோடி முதலிடம் என்கிற செய்தி உண்மையா?
இந்நிலையில், “தலைவி படம் பார்த்த பின் நானே எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருக்கவேண்டும் என்று தோன்றியது. கங்கனா ரணாவத் என் இளமை நரம்புகளை முறுக்கேற்றிவிட்டார்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக செய்திப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
தலைவி திரைப்படத்தை பார்த்த பிறகு, அதில் எம்.ஜி.ஆர் அவர்களின் வேடத்தில் நானே நடித்திருக்கலாம் என்று தோன்றியது என்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக, வைரல் புகைப்படத்தில் விகடன் நிறுவன லோகோ இடம்பெற்றிருந்ததால் இதுபோன்ற டெம்ப்ளேட்டை அவர்கள் உபயோகித்துள்ளனரா என்று அறிய அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை பார்வையிட்டோம்.
அப்போது, “தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை ஜெயலலிதா அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை உடனடியாக நீக்க வேண்டும். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!” என்கிற செய்தி இடம்பெற்ற டெம்ப்ளேட்டை எடிட் செய்து குறிப்பிட்ட வைரல் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை விகடன் தரப்பில் உறுதி செய்து கொண்டோம்.
மேலும், தலைவி திரைப்படம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியையும் இங்கே இணைத்துள்ளோம்.

Original card

Edited
Conclusion:
தலைவி திரைப்படம் பார்த்தவுடன் எம்.ஜி.ஆர் வேடத்தில் நானே நடித்திருக்க வேண்டும் என்று தோன்றியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாகப் பரவும் செய்திப் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)