Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என பரவும் செய்தி வீடியோ தற்போதையதா?
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என்று பரவும் செய்தி வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பழைய செய்தியாகும்.

75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ உண்மையா?
75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ தகவல் போலியானது

திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேற வேண்டும் என்று அண்மையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதா?
திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேற வேண்டும் என்று சுவரொட்டி ஒன்று அண்மையில் ஒட்டப்பட்டதாக பரவும் புகைப்படம் பழைய படமாகும்.

தோனி பாஜகவில் இணைந்துள்ளாரா? பிரதமருடன் தோனி இருப்பதாக பரவும் AI படம்.
கிரிக்கெட் வீரர் தோனி பாஜகவில் இணைந்ததாகப் பரவும் புகைப்படம் AI மூலமாக எடிட் செய்யப்பட்டதாகும்.