ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckWhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று பரவும் வதந்தி!

WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று பரவும் வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

WhatsApp மற்றும் போன் அழைப்புகளுக்கான புதிய தகவல் தொடர்பு விதிகள் என்று பரவும் தகவல்

வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் WhatsApp உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு தகவல் ஒன்றை அனுப்பி அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.

வாசகர் கேட்ட தகவல்:-

WhatsApp மற்றும் போன் அழைப்புகளுக்கான புதிய தகவல் தொடர்பு விதிகள் என்று பரவும் தகவல் - 01

இதே தகவல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் பரவி வருவதை நம்மால் காண முடிந்தது.

WhatsApp மற்றும் போன் அழைப்புகளுக்கான புதிய தகவல் தொடர்பு விதிகள் என்று பரவும் தகவல் - 02

Facebook Link

WhatsApp மற்றும் போன் அழைப்புகளுக்கான புதிய தகவல் தொடர்பு விதிகள் என்று பரவும் தகவல் - 03

Facebook Link

WhatsApp மற்றும் போன் அழைப்புகளுக்கான புதிய தகவல் தொடர்பு விதிகள் என்று பரவும் தகவல் - 04

Facebook Link

Also Read: மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று கூறி தகவல் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் தகவலில், நமது அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும் என்றும், அனைத்து அழைப்பு பதிவுகளும் சேமிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இத்தகவல் முற்றிலும் தவறானது  என்று வாட்ஸ்ஆப் அதன் இணையத்தளத்தில் தெளிவுப்படுத்தி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

WhatsApp blog

மேலும் WhatsApp இத்தகவல் பொய்யானது என்று அதன் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளது.

அடுத்து, நமது சாதனங்கள் அரசு அமைச்சக அமைப்புடன் இணைக்கப்படும்  என்று அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலும் தவறானதாகும். கடந்த 2020 ஆம் ஆண்டே PIB ( Press Information Bureau) இவ்வாறு பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று அதன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிகின்றது.

அடுத்தது, ‘WhatsApp பற்றிய முக்கிய தகவல்கள்’ என்று குறிப்பிட்டு ‘டிக்’குள் குறித்த விளக்கம் ஒன்று அத்தகவலில் தரப்பட்டிருந்தது. அதுவும் பொய்யான விளக்கம் என்று PIB தெளிவுப்படுத்தியுள்ளது.

வைராலாகும் இத்தகவல் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. நியூஸ்செக்கரின் ஆங்கில பிரிவினர் இதுக்குறித்து ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளனர். அதை இங்கே படிக்கலாம்.

இத்தகவல் இந்தி உள்ளிட்ட மொழிகளில் தற்சமயம் பரவியதை தொடர்ந்து, PIB இது பொய்யான தகவல் என்று தெளிவுப்படுத்தி கடந்த மாதம் (ஜூன்) 29 ஆம் தேதி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து  வாட்ஸ்ஆப்பின் செய்தித் தொடர்பாளரை நியூஸ்செக்கர் சார்பில்  தொடர்புக் கொண்டு விசாரித்ததில், “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை எங்களுக்கு முக்கியம்.  வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும் தகவல்களை பார்க்கவோ, படிக்கவோ அனுப்புபவர்கள் மற்றும் பெறுபவர்களால் மட்டுமே முடியும். மற்ற யாராலும் இதை காண முடியாது. ஏன் வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் கூட இதை பார்க்க முடியாது” என்று பதிலளித்தார்.

Also Read: ராதாரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் பேசுவதை பொருட்படுத்த வேண்டாம் என்றாரா அண்ணாமலை?

Conclusion

WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறான ஒன்று என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Sources

WhatsApp Clarification from its own blog
PIB Clarication’s tweets
WhatsApp Spokesperson Clarification


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular