ஜெயலலிதாவின் நகைகளை முதல்வர் ஸ்டாலின் நியாயமாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகை சொத்துக்களை நியாயமாக ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உ.பி.யில் குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரை கை, கால்களை கட்டிபோட்டு சாக்கடையில் படுக்க வைத்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Fact Check/Verification
ஜெயலலிதாவின் நகைகளை முதல்வர் ஸ்டாலின் நியாயமாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டுள்ளதாகப் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அப்போது, அவர்களுடைய பக்கத்தில், “AirShow-வைக்கூட ஒழுக்கமாக நடத்த தெரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சென்னையில் ஒரு AirShow-வை ஒழுக்கமாக நடத்த தெரியவில்லை, மணிப்பூர் பற்றிப் பேசுகிறார்; மற்ற மாநிலங்களில் நடக்கும் பிரச்னையைப் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள பிரச்னையைப் பற்றி பேசுவது இல்லை.” என்று நியூஸ்கார்ட் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடுத்தே வைரல் நியூஸ்கார்டினை உருவாக்கியுள்ளனர் என்பது நமக்குத் தெளிவாகியது.


இதுதொடர்பாக நியூஸ் 7 தமிழ் ஆசிரியர் சுகிதா சாரங்கராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, “அண்ணாமலை பேசியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.
Also Read: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
ஜெயலலிதாவின் நகைகளை முதல்வர் ஸ்டாலின் நியாயமாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post From, News 7 Tamil, Dated February 15, 2025