உத்திரப்பிரதேசத்தில் திருமணம் நடந்து ஆறு வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால், ஜோசியக்காரனின் பேச்சைக் கேட்டு, குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரின் கை, கால்களை கயிற்றால் கட்டிபோட்டு சாக்கடை நீரில் ஒரு வாரம் படுக்க வைத்ததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
உ.பி.யில் குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரை கை, கால்களை கட்டிபோட்டு சாக்கடையில் படுக்க வைத்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் “அங்கூர் ஜாதுஸ்காரன்” எனும் யூடியூப் பக்கத்தில் மார்ச் 31, 2023 அன்று வைரலாகும் இவ்வீடியோவின் முழுப்பகுதி பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இவ்வீடியோவின் 30 ஆவது வினாடியில் அவ்வீடியோவானது பொழுதுப்போக்குக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்றும், அதில் காணப்படும் சம்பவம் சித்தரிக்கப்பட்டது என்றும் தெளிவுப்படுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் இதே கருத்தில் வேறு ஒரு வீடியோவும் இந்த யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதேபோல் பல புனைவு வீடியோக்கள் இப்பக்கத்தில் தொடர்ந்து பதிவிடப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிந்தது.
Also Read: சங்கராச்சாரியார் கும்பமேளாவில் காவல்துறையால் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
உ.பி.யில் குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரை கை, கால்களை கட்டிபோட்டு சாக்கடையில் படுக்க வைத்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் உண்மையானது அல்ல; அது ஒரு புனைவு சம்பவமாகும்.
இந்த உண்மையானது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Youtube Video from, Ankur Jatuskaran, Dated March 31, 2023