Fact Check
திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் பிரியா ராஜன் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
Claim: திமுகவின் 2026 ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளர் பிரியா ராஜன்; பொதுமக்கள் கோரிக்கை
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று மைனர் வீரமணி பதிவிட்டுள்ளார்.
திமுகவின் 2026 ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளர் பிரியா ராஜன் என்று U2 Brutus மைனர் வீரமணி நியூஸ்கார்ட் ஒன்று பதிவிட்டதாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”பெரு வெள்ளத்திலிருந்து சென்னை நகரத்தை காப்பாற்றிய இரும்பு மங்கை மேயர் பிரியா ராஜன் அவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் பழைய வீடியோ!
Fact Check/Verification
திமுகவின் 2026 ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளர் பிரியா ராஜன் என்று U2 Brutus மைனர் வீரமணி பதிவிட்டதாகப் பரவும் நியூஸ் கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, மைனர் வீரமணி பெயரில் இயங்கும் போலியான சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த நியூஸ்கார்ட் முதலில் பதிவாகியுள்ளது என்பது நமக்கு தெளிவாகியது.
வைரலாகும் நியூஸ்கார்ட் U2 Brutus பெயரில் பரவிய நிலையில் அவருடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்திலேயே “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று தெளிவாக பதிவிட்டுள்ளார்.
மேலும், அவரது பெயரில் இயங்கும் மற்றொரு X பக்கம் போலிச்செய்திகளை தொடர்ச்சியாக பகிர்ந்து வருவதாகவும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
Also Read: பில்கேட்ஸ் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடையை சுத்தம் செய்தாரா ?
Conclusion
திமுகவின் 2026 ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளர் பிரியா ராஜன் என்று U2 Brutus மைனர் வீரமணி பதிவிட்டதாகப் பரவும் நியூஸ் கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
X post from, U2 Brutus, Dated December 06, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)