ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபெரியார் தொண்டர்களின் சிறுநீரை வாங்கி அமைச்சர்கள் குடிக்கலாம் என்று U2Brutus மைனர் வீரமணி கூறியதாகப் பரவும்...

பெரியார் தொண்டர்களின் சிறுநீரை வாங்கி அமைச்சர்கள் குடிக்கலாம் என்று U2Brutus மைனர் வீரமணி கூறியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
பெரியார் பெயரை சொல்லி கட்சி நடத்திக்கொண்டு சாதி சங்க மாநாட்டில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள் எல்லாம் பெரியார் தொண்டர்களின் மூத்திரத்தை வாங்கி குடிக்கலாம் – பிரபல யூடியூபர் மைனர் வீரமணி காட்டம்.

Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவுகிறது. மைனர் வீரமணி மற்றும் சன் நியூஸ் தரப்பில் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று உறுதி செய்துள்ளனர்.

பெரியார் தொண்டர்களின் சிறுநீரை வாங்கி சாதி சங்க மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் எல்லாம் குடிக்கலாம் என்று U2Brutus மைனர் வீரமணி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பெரியார் தொண்டர்களின்

”மூத்திரத்தை குடிக்கலாம். பெரியார் பெயரை சொல்லி கட்சி நடத்திக்கொண்டு சாதி சங்க மாநாட்டில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள் எல்லாம் பெரியார் தொண்டர்களின் மூத்திரத்தை வாங்கி குடிக்கலாம்-பிரபல யூடியூபர் மைனர் வீரமணி காட்டம்” என்பதாக இந்த நியூஸ்கார்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

பெரியார் தொண்டர்களின்
Screenshot From Facebook/vikghs.raja
பெரியார் தொண்டர்களின்
Screenshot from Facebook/augustin.michael.165
Screenshot from Facebook/maya.vel.545

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அசைவம் உண்பவர்கள் அயோக்கியர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!

Factcheck / Verification

பெரியார் தொண்டர்களின் சிறுநீரை வாங்கி சாதி சங்க மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் குடிக்கலாம் என்று U2Brutus யூடியூபர் மைனர் வீரமணி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

சன் நியூஸ் தமிழில் இப்படி ஏதேனும் நியூஸ்கார்ட் இடம்பெற்றுள்ளதா என்று தேடியபோது அப்படி எந்த செய்தியும் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே, சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளர் மனோஜை இந்த நியூஸ்கார்ட் குறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது போலியான நியூஸ்கார்ட்;சன் நியூஸ் வெளியிட்டதில்லை” என்று விளக்கமளித்தார். அவர்களுடைய அரசியல் க்ளிக் நியூஸ்கார்ட் ஒன்றை எடுத்தே வைரல் போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, U2Brutus மைனர் வீரமணி, தனது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியினரே இதைப்பரப்புகிறார்கள் என்கிற அர்த்தம் தொனிக்கும் பதிவுடன் ”ஆமக்குஞ்சுகளுக்கு இம்புட்டு அறிவா?” என்று ட்விட்டரில் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று விளக்கமளித்துள்ளார்.

Also Read: Fact Check: கணவருக்காக மனைவி கட்டிய குஜராத் ராணி-கி-வாவ் என்று பரவும் ராஜஸ்தான் ரணக்பூர் ஜெயின் கோவில் புகைப்படம்!

Conclusion

பெரியார் தொண்டர்களின் சிறுநீரை வாங்கி சாதி சங்க மாநாட்டில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் குடிக்கலாம் என்று U2Brutus யூடியூபர் மைனர் வீரமணி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Twitter Post From, U2Brutus, Dated March 26, 2023
Phone Conversation with, Manoj, Sun News Tamil Digital, Dated March 27, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular