ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்றாரா வானதி சீனிவாசன்?

Fact Check: அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்றாரா வானதி சீனிவாசன்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் – வானதி சீனிவாசன்


Fact
வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது.

அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்று வானதி சீனிவாசன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

அண்ணாமலையால்

“அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம். பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகினாலும் கவலை ஏதும் இல்லை. கட்சிக்காரர்களை வேவு பார்ப்பது, ஆடியோ, வீடியோ லீக்ஸ் என கட்சிக்கு அவரால் உண்டான அவப்பெயரே மிச்சம். அண்ணாமலையால் கட்சி இங்கு ஒரு அங்குலம் கூட வளரவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி நிச்சயம் தொடரும். வானதி சீனிவாசன், எம்.எல்.ஏ, பாஜக தேசிய மகளிரணி தலைவர்” என்பதாக இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

அண்ணாமலையால்
Screenshot from Twitter @jaya2016maha
அண்ணாமலையால்
Screenshot from Facebook/periyaarsaravanan
Screenshot from Facebook/A Muthu Kumar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: திமுகவுக்கு எதிராக செய்திகளைப் பரப்ப பாஜகவிடம் ஊடகவியலாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரவும் போலி நியூஸ்கார்டுகள்!

Fact Check/Verification

அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்று வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வானதி சீனிவாசன் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் தினமலர் வெளியிட்டதாகப் பரவி வருகின்ற நிலையில் அதுகுறித்து அவர்களது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப்பக்கத்தில் தேடியபோது அப்படி ஏதும் வெளியாகியிருக்கவில்லை. அவர்களுடைய பக்கத்திலும் இதுகுறித்த செய்தி எதுவும் வெளியாகியிருக்கவில்லை. அண்ணாமலை குறித்து அவர் பேசியதாக தினமலர் செய்தி எதுவும் வெளியிட்டிருக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் பாஜக குறித்து லோக்சபா தேர்தல் கூட்டணி ஆலோசனை பற்றிய செய்தியே சமீபத்தில் வெளியாகியிருந்தது.

Dinamalar News Card
அண்ணாமலையால்
Fake News Card

எனவே, தினமலர் டிஜிட்டல் தண்டபாணி அவர்களைத் தொடர்பு கொண்டு இந்த நியூஸ்கார்ட் குறித்து கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று அவர் விளக்கமளித்தார். மேலும், வைரல் கார்ட் போலியானது என்று சமூக வலைத்தளத்தில் தினமலர் தரப்பில் பகிரப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்த நியூஸ்கார்ட் குறித்து வானதி சீனிவாசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது தவறான தகவல். பரவும் செய்தி உண்மையில்லை” என்று விளக்கமளித்தார்.

Also Read: Fact Check: பள்ளி சீருடைகளுக்கு எதிராக தங்களது துப்பட்டாக்களைத் தூக்கி எறிந்தனரா மாணவிகள்? உண்மை என்ன?

Conclusion

அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்று வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Conversation With, Dinamalar Magazine Journalist Dhandapani, Dated March 19, 2023
Conversation With, Vanathi Srinivasan, Dated March 19, 2023
Dinamalar Facebook Post, Dated March 19, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular