Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: சந்திரயான் – 3 வெற்றிக்கு காரணம் வெங்கடாசலபதிதான் – பாஜக நாராயணன் திருப்பதி
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
சந்திரயான்-3 வெற்றிக்கு காரணம் வெங்கடாசலபதிதான்; விஞ்ஞானிகள் அல்ல என்று பாஜக நாராயணன் திருப்பதி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவுகிறது.
“நம் பாரத தேசம் விஞ்ஞானத்தை நம்பி இல்லை, வெங்கடாசலபதியின் அருளை நம்பி இருக்கிறது. சந்திரயான்-3 வெற்றியடைய வெங்கடாசலபதியின் அருளே காரணம், விஞ்ஞானிகள் அல்ல- நாராயணன் திருப்பதி” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனரா?
Fact Check/Verification
சந்திரயான் – 3 வெற்றிக்கு காரணம் விஞ்ஞானிகள் அல்ல; கடவுள் வெங்கடாசலபதிதான் என்று பாஜக நாராயணன் திருப்பதி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் தினமலர் வெளியிட்டதாகப் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம். ஆனால், அவர்களுடைய பக்கத்தில் நாராயணன் திருப்பதி சந்திரயான்-3 குறித்து கூறியதாக நியூஸ்கார்ட் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. எனவே, தினமலர் ஆசிரியரான தண்டபாணியிடம் இதுகுறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று உறுதி செய்தார். நாராயணன் திருப்பதி சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து வாழ்த்து மட்டுமே தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், நாராயணன் திருப்பதி தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ”வைரலாகும் செய்தி போலியானது” என்று விளக்கமளித்துள்ளார். இதன்மூலம், அவர் இவ்வாறு எந்த கருத்தையும் கூறவில்லை என்பது உறுதியாகிறது.
Conclusion
சந்திரயான் – 3 வெற்றிக்கு காரணம் விஞ்ஞானிகள் அல்ல; கடவுள் வெங்கடாசலபதிதான் என்று பாஜக நாராயணன் திருப்பதி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Post From, Narayanan Thirupathy, Dated July 16, 2023
Phone Conversation with Dhandapani, Editor, Dinamalar, Dated July 17, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.