Claim: இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Fact: வைரலாகும் நிகழ்வு பங்களாதேஷில் நடந்ததாகும்.
காயமடைந்த இராணுவ வீரர்களை ஆம்புலன்ஸில் கொண்டு போகும் போது இந்திய இராணுவத்தினரை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஓடாத ரயிலை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்தனரா ராணுவ ஜவான்கள்?
Fact Check/Verification
இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் வீடியோவில் காணப்படும் இஸ்லாமியர்கள் கிழக்கு பங்களாதேஷில் பேசப்படும் மொழி வழக்கில் வங்காள மொழியை பேசுவதை காண முடிந்தது.
அதேபோல் அவ்வீடியோவில் காணப்படும் இராணுவ வாகனத்தின் நம்பர் பிளேட்டில் வங்காள மொழியில் எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது. இந்திய ராணுவ வாகனங்களில் பொதுவாக ஆங்கிலத்திலேயே நம்பர் பிளேட் எழுதப்பட்டிருக்கும்.

வீடியோவில் காணப்படும் ஆம்புலன்ஸில் இருக்கும் ராணுவ வீரர்களின் உடையில் ‘AMC’ என்று எழுதப்பட்டிருப்பதையும், கூடவே சிவப்பு நிறத்துல் இலட்சினை ஒன்று இருப்பதையும் காண முடிந்தது. அது என்னவென்று தேடுகையில் AMC என்பது Bangladesh Army Medical Corps என்பதன் சுருக்கம் என்பதும், அந்த இலட்சினை பங்களாதேஷ் இராணுவ மருத்துவ படையின் அடையாள சின்னம் என்பதும் தெரிய வந்தது.

அதேபோல் ஆம்புலன்ஸின் முகப்பு பக்கத்திலும் இலட்சினை ஒன்று இருப்பதை காண முடிந்தது. அது என்னவென்று தேடியதில், அது பங்களாதேஷின் இராணுவ சின்னம் என்று அறிய முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தேடுகையில் Demonsbd.Net எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோ மார்ச் 29, 2021 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இப்பதிவில் வீடியோவில் காணப்படும் இச்சம்பவமானது பங்களாதேசத்தில் Hefazat-e-Islam எனும் அமைப்பால் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட தேடலை தொடங்கினோம்.
இத்தேடலில் இந்தியப் பிரதமர் மோடி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத்தில் பங்களாதேஷிற்கு வருகை புரிந்தபோது Hefazat-e-Islam எனும் அமைப்பு நாடு முழுவதும் போராட்டம் நடத்தியதாக ஊடகங்களில் செய்தி வந்திருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பங்களாதேஷில் நடந்த சம்பவத்தை இந்தியாவில் நடந்ததாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.
Conclusion
இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Self Analysis
Facebook post from Demonsbd.Net
Report from India Today
Report from The Hindu
Report from Hindustan Times
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)