Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நடந்து வரும் 2021 ஹரித்வார் கும்பமேளா விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. செவ்வாய்கிழமை நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 1,61,736 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். வைரஸ் பாதிப்படைந்த 879 பேர் உயிரிழந்துள்ளனர்
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித்வாரில் நடைபெறும் இந்துக்களின் புனித நீராடல் நிகழ்வான கும்பமேளா தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
கொரானாக் காலக்கட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். கூடவே நடந்து வரும் 2021 ஹரித்வார் கும்பமேளா விழாவில் எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து வருகின்றனர்.

Archive Link: https://archive.ph/GVAyZ

Archive Link: https://archive.ph/vTwjl

Archive Link: https://archive.ph/OX9Ab
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
2021 ஹரித்வார் கும்பமேளாவில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் உண்மையில் இந்த ஆண்டு ஹரித்வாரில் எடுக்கப்பட்டதா என்பதை அறிய, இப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு செய்ததில் இப்புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மைக் குறித்து நம்மால் அறிய முடிந்தது. 2021 ஹரித்வார் கும்பமேளா விழாவில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படம் உண்மையில் 2019 ஆண்டோ அல்லது அதற்கு முன்போ எடுக்கப்பட்ட பழைய படமாகும்.
2019 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் கும்பமேளா விழா நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.
இதுக்குறித்த செய்தி ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளிவந்திருந்தது. இச்செய்தியில் வைரலாகும் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கும்போது, 2021 ஹரித்வார் கும்பமேளாவில் எடுக்கப்பட்ட படம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் தவறானது என்பது நமக்கு நிருபணமாகின்றது.
நடந்து வரும் 2021 ஹரித்வார் கும்பமேளா விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கூடியதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படம் பழைய புகைப்படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
January 29, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 31, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 27, 2025