Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தெருநாய்களுக்கு உணவளிக்கும் உரிமையை தடுப்பது குற்றம் - உச்சநீதிமன்றம்
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது.
தெருநாய்களுக்கு உணவளிக்கும் உரிமையை தடுப்பது குற்றம் என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”உணவளிப்பது உரிமை, தடுக்குவது குற்றம்!
அரசியல் சட்டம் 51A(g), விலங்கு கொடுமைத் தடுப்பு சட்டம் 1960, BNS 325, ABC விதிகள் 2023 ஆகியவை உறுதி செய்கின்றன தெருநாய்களுக்கு உணவளிப்பது உங்கள் உரிமை. தொந்தரவு செய்தால் 100 அழைத்து புகார் செய்யலாம்; காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வணங்கிய திருவள்ளுவர் சிலை விபூதி அணிந்திருந்ததா?
தெருநாய்களுக்கு உணவளிக்கும் உரிமையை தடுப்பது குற்றம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் சன் நியூஸ் வெளியிட்டதாகப் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், கடந்த ஆகஸ்டு 22 அன்று, “தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது.. – உச்ச நீதிமன்றம்” என்கிற செய்தி அடங்கிய நியூஸ்கார்டே இடம்பெற்றிருந்தது.
மேலும், இதுவரை செய்திகளிலும் தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது என்றே இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சன் நியூஸ் வெளியிட்டதாகப் பரவும் இந்த நியூஸ்கார்டுகள் போலியானவை; அதில் இடம்பெற்றிருக்கும் செய்தியும் உண்மையில்லை” என்று விளக்கமளித்தார்.
எனவே, வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு உறுதியாகிறது.
Also Read: CM’s Foreign Trip: ஜெர்மனியில் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணம் என்று பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை!
தெருநாய்களுக்கு உணவளிக்கும் உரிமையை தடுப்பது குற்றம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post By, Sun News Tamil, Dated August 22, 2025
Phone Conversation with, Manoj, Sun News Digital, Dated September 10, 2025