Fact Check
காயத்ரி ரகுராம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டாரா?
Claim: காயத்ரி ரகுராம் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
Fact: வைரலாகும் அறிக்கை போலியானதாகும். அதிமுக தரப்பு இதை உறுதி செய்துள்ளது. காயத்ரி ரகுராமும் வைரலாகும் இத்தகவல் பொய் என்று தெளிவு செய்துள்ளார்.
அஇஅதிமுகவின் மகளிர் அணி துணை செயலாளர் காயத்ரி ரகுராமை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது,
“கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்
செல்வி காயத்திரி ரகுராம் (கழக மகளிர் அணி துணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்”

இந்த அறிக்கையை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
காயத்ரி ரகுராம் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக அறிக்கை ஒன்று வெளியானதை தொடர்ந்து இவ்வாறு ஒரு அறிக்கை அதிமுக தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளதா என அதிமுக சமூக ஊடகப் பங்களில் ஆய்வு செய்தோம்.
அதில் இவ்வாறு ஒரு அறிக்கை அதிமுக தரப்பிலிருந்து வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. ஆகவே அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் அறிக்கை குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் அறிக்கை போலியானது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து தேடுகையில் காயத்ரி ரகுராமும் வைரலாகும் அறிக்கை போலியானது என்று தெளிவுப்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
அப்பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது,
என்னா டா 420மலை நீ வார்ரூமிடம் அழ செய்தாய். அய்யா எடப்பாடியார் கடிதத் தலைப்பை தவறாகப் பயன்படுத்தி உங்களுக்காக அவர்கள் ஆபாசம் குற்றம் செய்ய தொடங்கினர். இது உங்கள் ஆலோசனையுடன், வழிகாட்டுதலின் படி யா? இது குற்றம் என்று அவர்களுக்குத் தெரியாதா? உன் வீரம் என்னை நோக்கி மட்டுமே, திமுகவுடன் இல்லை. புல் தடுக்கி பயில்வான் செயல். என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நீ விரும்புகிறீர்கள். அது நடக்காது. உங்கள் வார்ரூம் ஜோக்கர்களுக்காக உங்களுக்கு நீங்களே சவுக்கடி கொடுக்க வேண்டும், நான் அதை தலைகீழாக செய்வேன், பார்த்து டா கோமாளி. நான் ஜோக்கர்களுக்கு பயப்படவில்லை என்று சொல்லுங்கள். உங்கள் சில்லறை யோசனையால் எந்த பயனும் இல்லை.

Also Read: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிச்சைக்காரராக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டதா கலைஞர் நியூஸ்?
Conclusion
காயத்ரி ரகுராம் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை முற்றிலும் போலியானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
X post by Gayathri Raghuram, Deputy Secretary, Women’s wing, AIADMK, Dated January 17, 2025
Phone Conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்