Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
தைரியம் இருந்தால் ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் மீது கைவைத்தோ கைது செய்தோ பாருங்கள் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா அவர்கள் பதிவிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
கோவையில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். ஆயிரக்கணக்கான பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தின் நிறுவனரான சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் மீதும், ஈஷா யோகா மையத்தின் மீதும் சட்ட விதிமீறல்களைச் செய்துள்ள குற்றச்சாட்டுகளில் விரைவில் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தன்னுடைய முகநூல் பக்கத்தில் “தமிழக அரசிற்கும் ஸ்டாலினுக்கும் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் சார்பில் வெளிப்படையான சவால். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஸ்ரீ சத்குரு ஜீ அவர்கள் மீது கைவைத்தோ கைது செய்தோ பாருங்கள்” என்பதாக பதிவு ஒன்றினை இட்டதாகப் புகைப்படம் ஒன்று வைரலாகியது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
தைரியம் இருந்தால் ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு மீது கைவைத்தோ கைது செய்தோ பாருங்கள் என்று பாஜகவின் ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் புகைப்படம் குறித்து அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஆராய்ந்தோம். அதுபோன்ற பதிவுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
தொடர்ந்து வைரலாகும் ஸ்க்ரீன் ஷாட்டில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களும் வரிசைக்கிரமமாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிடுவது போன்று அமையவில்லை.
Facebook Link: https://www.facebook.com/HRajaBJP/posts/3823521784431810
எனவே, மீண்டும் அவரது முகநூல் பக்கத்தில் ஆராய்ந்தபோது “இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை போலும்.” என்று ஒரு பதிவினை மே 10 ஆம் தேதியன்று இட்டிருக்கிறார். அதுவும், வைரலாகும் புகைப்படமும் ஒரே மாதிரி அமைந்துள்ளது.
ORIGINAL IMAGE
FAKE IMAGE
எனவே, வைரலாகும் புகைப்படம் குறிப்பிட்ட பதிவினை எடுத்து எடிட் செய்து உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.
தொடர்ந்து, ஹெச்.ராஜா அவர்களை இதுகுறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். “குறிப்பிட்ட அந்த பதிவினை நான் பதிவிடவில்லை. அது போலியாக பரப்பப்படுகிறது” என்று நமக்கு விளக்கமளித்தார்.
Conclusion:
தைரியம் இருந்தால் ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு மீது கைவைத்தோ கைது செய்தோ பாருங்கள் என்று பாஜகவின் ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
H.Raja: https://www.facebook.com/HRajaBJP/posts/3823521784431810
H.Raja
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.