புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkதிமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்றாரா எல்.முருகன்?

திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்றாரா எல்.முருகன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் அவர்கள் திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்று எல்.முருகன் கூறியதாக பரவும் தகவல்
Source: Facebook

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வென்றதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மே 7 அன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் முதல்வராக பொறுப்பேற்றப்பின் முதல் கையெழுத்தாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க கையெழுதிட்டார். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல்கட்டமாக ரூ.2000 இந்த மாதமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த சனிக்கிழமையிலிருந்து (மே 15) முதல் தவணை ரூ. 2000 தமிழக சார்பில் அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் திமுக கொடுக்கும் ரூ.2000 தங்களுக்கு தேவையில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியதாக நியூஸ் 7 தமிழின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்று எல்.முருகன் கூறியதாக பரவும் பதிவு - 1

Archive Link: https://archive.ph/G6bEK

திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்று எல்.முருகன் கூறியதாக பரவும் பதிவு - 2

Archive Link: https://archive.ph/H8QFr

திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்று எல்.முருகன் கூறியதாக பரவும் பதிவு - 3

Archive Link: https://archive.ph/H8QFr

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்று எல்.முருகன் கூறியதாக பரப்பப்படும் புகைப்படச் செய்தியைக் காணும்போதே அது போலியானதுதான் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது.

ஏனெனில் வைரலாகும் புகைப்படச் செய்தியில் தேதி குறிப்பிடப்படவில்லை. நியூஸ் 7 தமிழில் வழக்கமாக பயன்படுத்தப்படும் டிசைன், எழுத்துறு போன்றவையும் இதில் காணப்படவில்லை.   மேலும் இதில் ‘பாஜக’ என எழுதுவதற்கு பதிலாக ‘பஜக’ என்று எழுத்துப் பிழையுடன் எழுதப்பட்டிருந்தது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போதே இது போலியானதுதான் என்பதை நம்மால் உணர முடிந்தது. இருப்பினும் சிலர் இதை உண்மை என்று நம்பி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால் இதுக்குறித்து முறைப்படி ஆய்வு செய்து விளக்க முடிவு செய்தோம்.

ஆய்வின் முதற்படியாக இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி நியூஸ் 7 தமிழில் பதிவிடப்பட்டுள்ளதா என்பதை நியூஸ் 7 தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இதில் இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி நியூஸ் 7 தமிழில் பதிவிடப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.

இதன்பின் வைரலாகும் இச்செய்திக் குறித்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் துறையைத் தொடர்புக் கொண்டு கேட்டோம். அவர்கள்,

“இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை. இது பொய் செய்தி”

என்று நமக்கு விளக்கமளித்தனர்.

ஆகவே இதனடிப்படையில் பார்க்கும்போது திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்று எல்.முருகன் அவர்கள் கூறியதாக பரவும் தகவல் தவறான ஒன்று என்பது நமக்கு உறுதியாகின்றது.

Conclusion

திமுக கொடுக்கும் ரூ.2000 தேவையில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியதாக பரவும் புகைப்படச் செய்தி போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

News 7 Tamil:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular