Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தேர்தல் விவசாயத்தின் மூலம் ரூ.4 கோடி அறுவடை செய்த ஏழை விவசாயி என்று தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா பற்றி பசுமை விகடன் அட்டைப்பட செய்தி வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழ்நாட்டிற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், தேர்தலில் செலவு செய்வதற்காக பாஜக சார்பில் ஹெச்.ராஜாவிடம் கட்சி நிதியாக ரூ.4 கோடி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அதை தேர்தலுக்கு செலவிடாமல் அவருடைய சொந்த செலவிற்கு உபயோகித்து 4 கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றினைக் கட்டி வருவதாக பாஜகவின் காரைக்குடி நகரத்தலைவர் சந்திரன் குற்றச்சாட்டு ஒன்றினை எழுப்பியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. விகடனும் அந்த செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், “குறைவான வருமானம் செலவு நிறைவான இலாபம். தேர்தல் விவசாயத்தின் மூலம் 45 நாட்களில் 4 கோடியை அறுவடை செய்த காரைக்குடி ஏழை விவசாயி” என்கிற வகையில் ஹெச்.ராஜா குறித்து அட்டைப்படத்துடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பசுமை விகடன் வெளியிட்டது போன்று வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தேர்தல் விவசாயத்தின் மூலம் ரூ.4 கோடி அறுவடை செய்த ஏழை விவசாயி என்று பசுமை விகடன் ஹெச்.ராஜா பற்றி முகப்புப் பக்கம் வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய முதலில் பசுமை விகடன் இதழில் இதுகுறித்து ஆராய்ந்தோம். ஏனெனில், குறிப்பிட்ட அப்புகைப்படம் சித்தரிக்கப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிந்தது.
அப்போது, குறிப்பிட்ட அந்த செய்தி தவறானது; எடிட் செய்யப்பட்டு போலியாக பசுமை விகடன் அட்டைப்படம் என்பதாகப் பரவுவதாக பசுமை விகடன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது நமக்குத் தேடலின் முடிவில் தெரிய வந்தது. இதனை, பசுமை விகடனின் பொறுப்பாசிரியர் அறிவழகன் மூலமாக உறுதி செய்து கொண்டோம்.
தொடர்ந்து, இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தரப்பில் பேசியபோது பரவிய புகைப்படம் போலியாக சித்தரிக்கப்பட்டது; எடிட் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.
தேர்தல் விவசாயத்தின் மூலம் ரூ.4 கோடி அறுவடை செய்த ஏழை விவசாயி என்று பசுமை விகடன் ஹெச்.ராஜா பற்றி முகப்புப் பக்கம் வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் சித்தரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Pasumai Vikatan: https://www.facebook.com/PasumaiVikatan/posts/5586219931452905
Vikatan: https://www.vikatan.com/news/politics/karaikudi-city-party-presidents-allegations-against-h-raja
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 4, 2025
Ramkumar Kaliamurthy
June 2, 2025
Ramkumar Kaliamurthy
May 29, 2025