Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
‘வங்கதேச இந்துக்களை பற்றி எனக்கு கவலையில்லை (I don’t care about Bangladeshi Hindus)’ என்று எழுதப்பட்ட கைப்பையை பிரியங்கா காந்தி வைத்திருந்தார்.
Also Read: 3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
‘வங்கதேச இந்துக்களை பற்றி எனக்கு கவலையில்லை (I don’t care about Bangladeshi Hindus)’ என்று எழுதப்பட்ட கைப்பையை வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வைத்திருந்ததாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் ‘Priyanka Gandhi makes a statement with ‘Palestine’ bag in Parliament, BJP reacts’ என்று தலைப்பிட்டு இந்தியா டுடே டிசம்பர் 16, 2024 அன்று வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படத்திற்கு ஒத்த படத்தை பயன்படுத்தி இருப்பதை காண முடிந்தது. அப்படத்தில் பிரியங்கா காந்தி ‘பாலஸ்தீன்’ என்று எழுதப்பட்டிருந்த கைப்பையை வைத்திருந்தார்.
அப்படத்தையும் வைரலாகும் படத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில் இரண்டும் ஒரே படம்தான் என அறிய முடிந்தது. பிரியங்கா காந்தி வைத்திருந்த கைப்பையை மட்டும் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது எனவும் அறிய முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் தி இந்து அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பாலஸ்தீன் என்று எழுதப்பட்ட கைப்பையை பிரியங்கா காந்தி எடுத்து வந்ததாக புகைப்படங்களை பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
ANI ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும் காந்தி பிரியங்கா பாலஸ்தீன் என்று எழுதப்பட்ட கைப்பையோடு நாடாளுமன்றத்திற்குள் நுழையும் வீடியோவை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் ‘வங்கதேச இந்துக்களை பற்றி எனக்கு கவலையில்லை’ என்று எழுதப்பட்ட கைப்பையை வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வைத்திருந்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பது உறுதியாகின்றது.
பிரியங்கா காந்தியின் கைப்பை விஷயம் செய்திப் பொருளாக மாறிய மறுநாள் (டிசம்பர் 17, 2024) பிரியங்கா காந்தியும் வேறு சில காங்கிரஸ் எம்.பி.க்களும் ‘வங்கதேச இந்துக்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு ஆதரவு’ என்று இந்தியில் எழுதப்பட்ட கைப்பைகளுடனும், ‘வங்கதேச சிறுபான்மையினர்களுக்கு ஆதரவு’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கைப்பைகளுடனும் நாடாளுமன்றத்திற்குள் சென்றுள்ளனர்.
இதுக்குறித்த படங்களை பிரியங்கா காந்தி அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
Also Read: வங்கதேச இஸ்லாமியர் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக பரவும் படம் உண்மையானதா?
(இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)
Sources
Report By India Today, Dated December 16, 2024
Instagram Post By The Hindu, Dated December 16, 2024
YouTube Video By ANI, Dated December 16, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Ramkumar Kaliamurthy
June 4, 2025
Ramkumar Kaliamurthy
May 29, 2025
Sabloo Thomas
May 27, 2025