Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சென்னை மழைவெள்ளத்தில் இளையராஜா மகிழ்ச்சி, நன்றி முதல்வர், DMK Fails என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை மக்களை வாட்டி வதைத்தது. குறிப்பாக சென்னை மக்கள், மழை வெள்ளத்தால் பெரிதும் அவதிக்குள்ளாகினர். வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னைக்கு அருகே கரையைக் கடந்த நிலையில் மழை படிப்படியாக குறையத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், “இளையராஜா மகிழ்ச்சி!! “ஓட நீரோடை இந்த சென்னை அது போல…விடியல் வந்து தீண்டும் போது என்ன கருமமோ….”இளையராஜா + மழை.விடியல்பரிதாபங்கள் #தத்தளிக்கும்தலைநகரம் #DMKFailsTN” என்பதாக இளையராஜா படகில் சென்னை வெள்ளத்தில் செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 2000 உண்மையான இந்துக்களுக்கு நிவாரணம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
சென்னை மழைவெள்ளத்தில் இளையராஜா, நன்றி முதல்வர் என்பதாக பரவும் வீடியோ தற்போதைய ஒன்றா என்பதாக உண்மையறிய ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வீடியோ குறித்து கடந்த வாரங்களில் ஏதேனும் செய்தி வந்துள்ளதா என்று ஆய்வு செய்தோம். இளையராஜா குறித்த முக்கிய வார்த்தைகளை உபயோகித்து தேடியதில் கடந்த 2015 ஆம் ஆண்டு, டிசம்பர் 4 ஆம் தேதியன்று நியூஸ் 7 தொலைக்காட்சி குறிப்பிட்ட வைரல் வீடியோவை வெளியிட்டிருந்தது.
அதன்படி, சென்னை மழைவெள்ளத்தில் அண்ணாசாலையில் அமைந்திருந்த திருமலர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை சந்தித்து இசையமைப்பாளர் இளையராஜா ஆறுதல் கூறினார் என்கிற செய்தி குறிப்பிட்ட வைரல் வீடியோவுடன் வெளியாகியிருந்தது.
அந்த வீடியோவை எடுத்து தற்போதைய சென்னை மழைவெள்ளத்தில் இளையராஜா என்று வைரலாக்கி வருகின்றனர். எனவே, தற்போதைய மழைவெள்ளத்தில் இசையமைப்பாளர் இளையராஜா என்பதாக அவர் படகில் செல்வது போன்று பரவும் வீடியோ 5 வருடங்கள் பழைமையானது என்பது உறுதியாகிறது.
சென்னை மழைவெள்ளத்தில் இளையராஜா, நன்றி முதல்வர் என்பதாக பரவும் வீடியோ ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
November 10, 2021
Ramkumar Kaliamurthy
December 11, 2023
Ramkumar Kaliamurthy
December 6, 2023