வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை மூடி வையுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மிகத் தீவிரமாக பெய்து வருகின்றது. மாநிலத்தின் பெரும்பாலான அணைகள், ஏரிகள், குளங்களில் நீர் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக வீட்டிற்குள் மழைநீர் புகுந்து பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வரும் நிலையில், வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக சன் நியூஸின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: சென்னை வெள்ளம் என்று குஜராத் வெள்ள பாதிப்பு படத்தை பதிவிட்ட பாஜக நிர்வாகி
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை மூடி வையுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய, முன்னதாக இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை சன் நியூஸ் பிரசுரித்ததா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை சன் நியூஸ் பிரசுரித்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. மாறாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அறிவுறுத்தியுள்ளேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து சன் நியூஸின் டிஜிட்டல் தலைவர் மனோஜ் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Conclusion
வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை மூடி வையுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Mr. Manoj, Digital Head, Sun News
Facebook post from Sun News
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)