Fact Check
சமோசா, ஜிலேபியிலும் இனி சிகரெட் போன்று எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் என்றதா சுகாதாரத்துறை?
Claim
சமோசா, ஜிலேபியிலும் இனி எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும்
Fact
வைரலாகும் செய்தி தவறானது என்று விளக்கமளித்துள்ளது ஒன்றிய அரசு.
சமோசா, ஜிலேபியிலும் இனி எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளதாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
“Obesityக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், Cigarette packsல் இடம் பெற்றுள்ள warning note போலவே இனி சமோசா, ஜிலேபி போன்ற snacks வகைகளுக்கும் சர்க்கரை மற்றும் எண்ணெய் குறித்த எச்சரிக்கை பலகைகளை வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்” என்று இந்த செய்தி பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் போடப்பட்ட தரமற்ற சாலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
சமோசா, ஜிலேபியிலும் இனி எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளதாக பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் செய்தி குறித்து ஆராய்ந்தபோது ”சமோசா, ஜிலேபி ஆகிய உணவுப்பண்டங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்ததாகப் பரவும் செய்தி தவறானது” என்று சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை நமக்குக் கிடைத்தது.

மேலும், இந்த செய்தி தவறானது; சுகாதார அமைச்சகம் அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று மத்திய அரசின் சார்பில் PIB Fact Check விளக்கமளித்துள்ளது.
Also Read: ‘Sorry வேண்டாம் – Sorry கேளு’… குழப்புமுறும் வகையில் பதாகை பிடித்திருந்தாரா விஜய்?
Conclusion
சமோசா, ஜிலேபியிலும் இனி எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளதாகப் பரவும் தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, PIB, Dated July 16, 2025
Statment From, pib.gov.in