ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkமிசோரமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று பரவும் இந்தோனேசிய விபத்து வீடியோ!

மிசோரமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று பரவும் இந்தோனேசிய விபத்து வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மிசோரமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த காட்சி

Fact: வைரலாகும் வீடியோ இந்தோனேசியாவைச் சேர்ந்ததாகும்.

மிசோரமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“மோடியோட அரசின் அடுத்த சாதனை. மிசோரமில் கட்டிய ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்த காட்சி. 17 பேர் உயிரிழந்த நிகழ்வு. ரயில்வே துறையா உயிர் கொல்லும் துறையா” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @ManiSek32574261

Archived Link

Screenshot from Facebook/naheem.hameeth

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சவுக்கு சங்கர் அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

Fact Check/Verification

மிசோரமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதில், குறிப்பிட்ட நிகழ்வு நடைபெற்றது இந்தோனேசியாவில் என்பது நமக்குத் தெரிய வந்தது.

இந்தோனேசியாவின் Nanga Mentukak கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆற்றில் வாத்து பிடிக்கும் போட்டியின் போது, ஆற்றின் மேலுள்ள தொங்கு பாலம் கீழே விழுந்து விபத்தானதில் 32 பேர் காயமடைந்தனர் என்று பல்வேறு இந்தோனேசிய ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.

அதில் இவ்வீடியோ காட்சியின் பகுதி புகைப்படமாக இடம் பெற்றுள்ளது. மேலும், பல்வேறு இந்தோனேசிய ஊடகங்களும் தங்களது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவுடன் விபத்து செய்தியை வெளியிட்டுள்ளன.

மிசோரமில் நடந்த ரயில்வே பால விபத்து குறித்து மிசோரம் முதல்வரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இடம்பெற்ற வீடியோவை இங்கே இணைத்துள்ளோம். அதில் இடம்பெற்றுள்ள பாலம் வைரல் வீடியோவில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று ராமநாதபுரம் கல்குள மக்கள் தீர்மானம் எடுத்தனரா?

Conclusion

மிசோரமில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த காட்சி என்று பரவும் வீடியோ இந்தோனேசியாவைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
News Report From, foxnews, Dated August 18, 2023
YouTube Video From, Official iNews, Dated August 18, 2023

Tweet from ZoramthangaCM, Dated August 23, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular