சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkசவுக்கு சங்கர் அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

சவுக்கு சங்கர் அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமனம்.

Fact: வைரலாகும் அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

சவுக்கு சங்கர் அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சவுக்கு சங்கர்
Screenshot from Facebook/RameshKumar

Facebook Link

சவுக்கு சங்கர்
Screenshot from Facebook/Vigneshbabu

Facebook Link

Screenshot from Facebook/manivannan.manivannan.73

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதா?

Fact Check/Verification

சவுக்கு சங்கர் அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் அறிக்கை பற்றிய உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தபோது கடந்த 15ஆம் தேதிக்கு பிறகு எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மாநாட்டிற்கு பின்பான நன்றி நவிலும் அறிக்கையே புதிதாக வெளியாகியுள்ளது. இதற்கு நடுவில் 19ஆம் தேதியன்று எந்த அறிக்கையும் வெளியாகியிருக்கவில்லை.

மேலும், சவுக்கு சங்கரின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஒன்றான Voice of Savukku என்னும் ட்விட்டர் பக்கத்தில், திமுக ஐடி விங்கிற்கு நன்றி என்று இந்த அறிக்கையை வெளியிட்டு அது போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: சுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!

Conclusion  

சவுக்கு சங்கர் அதிமுகவின் தேர்தல் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் அறிக்கை போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False    

Our Sources
Tweet from AIADMK Official, Dated August 15, 2023
Twitter Post From, Voice of Savukku, Dated August 19, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular