ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeCoronavirusகொரானாவுக்கு 73 நாட்களில் தடுப்பு மருந்தா?

கொரானாவுக்கு 73 நாட்களில் தடுப்பு மருந்தா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

கொரானா நோய்க்கு இன்னும் 73 நாட்களில் தடுப்பு மருந்து கிடைத்து விடும் ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

வைரலான செய்தி.

Fact Check/Verification

இன்று உலகுக்கே மிகப்பெரிய சவாலாக விளங்கும் கொரானா நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்க உலகநாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள ‛COVISHIELD’ தடுப்பூசி, 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என்று தினத்தந்தி, தினமலர் மற்றும் தினகரன் உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

கொரானா தடுப்பூசிக் குறித்து தினத்தியில் வந்தச் செய்தி
தடுப்பூசிக் குறித்து தினத்தியில் வந்தச் செய்தி.
கொரானா தடுப்பூசிக் குறித்து தினமலரில் வந்தச் செய்தி
தடுப்பூசிக் குறித்து தினமலரில் வந்தச் செய்தி.
கொரானா தடுப்பூசிக் குறித்து தினகரனில் வந்தச் செய்தி
தடுப்பூசிக் குறித்து தினகரனில் வந்தச் செய்தி.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்துக்கு சிறப்புத் தயாரிப்பு முன்னுரிமையை அரசு அளித்துள்ளது.

“இறுதி கட்ட  பரிசோதனையின் முதல் டோஸ்  சனிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 29 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் வழங்கப்படும். அதற்கடுத்த 15 நாட்களில் இறுதி முடிவுகள் கிடைக்கும்.  அதன் பிறகு தடுப்பு மருந்து வணிகமயமாக்கப்படும்”. 

என்று சீரம் நிறுவனத்தின் அதிகாரி கூறியதாகவும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, நியூஸ் செக்கர் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம்.

உண்மை என்ன?

ஊடகங்கள் வெளிவரும் இச்செய்தியைக் குறித்து அறிய கூகுளில்  தேடினோம். நம் தேடலில் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து நம்மால் அறிய முடிந்தது.

நம் தேடலில், “73 நாட்களில் கொரோனா தடுப்பூசி? சீரம் நிறுவனம் விளக்கம்!” எனும் தலைப்பில் புதிய தலைமுறையில் செய்தி ஒன்று வெளியானதை நம்மால் காண முடிந்தது.

கொரானா தடுப்பூசிக் குறித்து புதிய தலைமுறையில் வந்தச் செய்தி
கொரானா தடுப்பூசிக் குறித்து தலைமுறையில் வந்தச் செய்தி.

அச்செய்தியில்,73 நாட்களில் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று ஊடகங்கள் வெளியிட்டச் செய்திகளுக்கு சீரம் மறுப்பு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுக்குறித்து மேலும் நாம் தேடுகையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, தங்களது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில், COVISHIELD 73 நாட்களில் கிடைக்கும் என்று ஊடகங்களில் வந்தச் செய்தி தவறானது என்று மறுப்பைத் தெரிவித்துள்ளதை நம்மால் காண முடிந்தது.

 மேலும் இதன் மூன்றாம் கட்ட சோதனை இன்னும் முழுமையடையவில்லை என்றும் மருந்து எப்போது கிடைக்கும் என்பதை தாங்கள் அதிகாரப் பூர்வமாக அறிவிப்போம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

SII-ன் டிவிட்டர் பதிவு.

இந்நிகழ்வுக் குறித்த விரிவான விளக்கத்தை சீரம் நிறுவனம் தங்களின் அதிகாரப் பூர்வமான ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.

https://www.facebook.com/SerumInstituteIndia/photos/a.858080297967530/1008620359580189/
SII-ன் ஃபேஸ்புக் பதிவு.

Conclusion

நம் விரிவான ஆய்வில்  இன்னும் 73 நாட்களில் கொரானாவுக்கு மருந்து கிடைக்கும் என்று ஊடகங்களில் வந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று உறுதியாகியுள்ளது.

Result: Misleading


Our Sources

Hindustan Tamil Twitter Profile: https://twitter.com/ZHindustanTamil/status/1297390609251139584

Dinakaran: https://www.dinakaran.com/News_detail.asp?Nid=611477

Daily Thanthi: https://www.dailythanthi.com/News/India/2020/08/23142613/Indians-to-get-free-shot-of-coronavirus-vaccine-in.vpf

Dinamalar: https://www.dinamalar.com/news_detail.asp?id=2600306

Puthiya thalaimurai: https://www.puthiyathalaimurai.com/newsview/78319/Serum-Institute-clarifies-after-reports-claim-free-Covid19-vaccine-shots-in-73-days

SII Twitter Profile: https://twitter.com/SerumInstIndia/status/1297448737120243712

SII Facebook Profile: https://www.facebook.com/SerumInstituteIndia/photos/a.858080297967530/1008620359580189/


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular