Friday, December 5, 2025

Fact Check

அறநிலையத்துறை சம்பளம் தராத அர்ச்சகரா இவர்?

banner_image

அறநிலையத்துறை சம்பளம் தராவிட்டாலும் தொடர்ந்து பணி செய்யும் அர்ச்சகர் என்று கூறி பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அறநிலையத்துறை சம்பளம் தராவிட்டாலும் தொடர்ந்து பணி செய்யும் அர்ச்சகர் என்று பரவும் பதிவு
Source: Facebook

Fact Check/Verification

சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு ஒன்று அதிக பேரால் பகிரப்பட்டு வருகின்றது. அப்பதிவில்,

“இந்து அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பதில்லை. கிராமத்தில் தட்டு வருமானம் இல்லை; இறைவனும் கண்டு கொள்ளவில்லை; வயது முதுமை; பெரிய கோவில்களில் நடப்பதும் பெரிய பெரிய படிகளில் ஏறி இறங்குவதும் முன்போல் முடியவில்லை. ஆனால் தான் வராவிட்டால் பகவான் பட்டினி கிடப்பானோ என்ற கவலை. அதனால் தான் இருக்கும் வரை பகவான் கைவிட்டாலும் பகவானை கைவிடுவதில்லை என்று வாழும் மகான்கள் பலர்.”

என்ற வாசகங்கள் எழுதப்பட்டு, கூடவே ஒரு வயது முதிர்ந்த அர்ச்சகர் ஒருவரின் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பதிவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=181624063551667&id=100051122234688
https://www.facebook.com/pss.nil/posts/833908600696031

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இப்பதிவில், புகைப்படத்தில் காணப்படும் அர்ச்சகர் குறித்து எந்த குறிப்பும் தரப்படவில்லை. ஆனால் இவருக்கு தமிழகத்தின் அறநிலையத்துறையால் சம்பளம் தரப்படவில்லை எனவும், ஆனாலும் இறை பக்தி காரணமாக இவர் தொடர்ந்து இறைப்பணி செய்து வருகிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இத்தகவலின் பின்னணிக் குறித்து அறிய, முதலில் வைராலாகும் அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.

அவ்வாறு ஆய்வு செய்ததில் வைரலாகும் அப்புகைப்படத்தில் இருக்கும் அர்ச்சகர் குறித்த உண்மைகள் நமக்கு தெரிய வந்தது.

படத்தில் இருக்கும் அர்ச்சகரின் பெயர் கிருஷ்ணா பட், இவருக்கு ஏறக்குறைய 87 வயதாகிறது. இவர் கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள பாதவி லிங்க கோவிலில் அர்ச்சகராக உள்ளார்.

இவர் இக்கோவில் உள்ள மூன்று மீட்டர் உயரமான ஒற்றை சிவலிங்கத்திற்கு தினமும் இரண்டு முறை தவறாமல் பூஜை செய்து வருகிறார். இதுக்குறித்த செய்தியானது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்திருந்ததை நம்மால் காண முடிந்தது.

ஹம்பி அர்ச்சகர்
Source: The New Indian Express

மேலும்  Arvind Patole எனும் யூ டியூப் சேனலில் இவர் பூஜை செய்யும் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது.

Courtesy: Arvind Patole

மேற்குறிப்பிட்ட ஆதாரங்களின்படி பார்க்கையில், இந்த கோயில் அர்ச்சகர் தமிழகத்தைச் சார்ந்தவரே அல்ல என்பதும், அவர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதும் நமக்கு உறுதியாகிறது.

இதன்படி பார்த்தால், அறநிலையத்துறை இவருக்கு சம்பளம் தரவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் கூற்று முற்றிலும் தொடர்பில்லாத ஒன்று என்பது நமக்கு தெளிவாகிறது.

Conclusion

தமிழக அறநிலையத்துறை சம்பளம் தராவிட்டாலும் தொடர்ந்து பணி செய்யும் அர்ச்சகர் என்று கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பதிவானது முற்றிலும் தவறான ஒன்று என்பதை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/reddiyars/posts/3391365794313114

Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=181624063551667&id=100051122234688

The New Indian Express: https://www.newindianexpress.com/states/karnataka/2019/apr/28/this-temple-and-the-priest-attract-devotees–lensmen-1969944.html

Facebook Profile: https://www.facebook.com/pss.nil/posts/833908600696031

Arvind Patole: https://www.youtube.com/watch?v=tUG2VFj-XbQ&list=TLPQMjExMTIwMjCalOKZB-8jwg&index=1


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,439

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage