Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானா பாதிப்புக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
தொடர்ந்து சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பி அவர்கள் கடந்த திங்கட்கிழமை(07/09/2020) அன்று கொரானாத் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபட்டார்.
கொரானா நீங்கினாலும், கொரானாவின் தாக்கத்தினால் எஸ்.பி.பி அவர்களின் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதை சரிசெய்வதற்கான சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் எஸ்.பி.பி அவர்களுக்கு மாற்று நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக செய்தி ஒன்று ஊடகங்களில் பரவி வருகிறது.
இச்செய்தியானது நியூஸ்18, தினகரன், மற்றும் தமிழ் முரசு போன்ற இணையத் தளங்களில் வெளிவந்திருந்தது.
செய்தி ஊடகங்களில் வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய்ந்தோம்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானாக் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்து அவர் உடல்நிலைக் குறித்து தவறானப் பொய் செய்திகள் அடிக்கடி வந்தவண்ணம் உள்ளது.
முதலில் அவர் இறந்து விட்டதாக செய்தி வந்தது. அச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் முழுமையாக ஆராய்ந்து அது தவறு என்று நிரூபித்திருந்தோம்.
அக்கட்டுரையைப் படிக்க: https://tamil.newschecker.in/coronavirus/sp-balasubramanyam-was-rumored-to-be-dead/
இரண்டாவதாக, அவர் கொரானாவிலிருந்து குணமாகுவதற்கு முன்பே குணமாகிவிட்டதாக செய்தி வந்தது. அச்செய்தியையும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் முழுமையாக ஆராய்ந்து அது தவறு என்று நிரூபித்திருந்தோம்.
அக்கட்டுரையைப் படிக்க: https://tamil.newschecker.in/coronavirus/did-spb-cure-from-corona/
இப்போது எஸ்.பி.பி அவர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது. இச்செய்தியும் முந்தைய செய்திகளைப் போன்று பொய்யான செய்திதான். இதை எஸ்.பி.பி அவர்களின் மகன் எஸ்.பி,பி.சரண் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
எஸ்.பி.பி.சரண் அவர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலைக் குறித்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
10/09/2020 அன்று அவர் இட்ட பதிவில் எஸ்.பி.பி அவர்களின் உடல்நிலை சிறிது சிறிதாக சரியாகி வருவதாகவும், முழுமையாக குணமடைய சிறிது காலம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் எஸ்.பி.பி அவர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது, இச்செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.பி.பி.சரண் அவர்கள் வெளியிட்ட வீடியோ உங்களுக்காக:
நம் விரிவான ஆய்வுக்குப்பின், ஊடகங்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக வந்தச் செய்தியானது, முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகியுள்ளது.
Polimer News Twitter Profile: https://twitter.com/polimernews/status/1303193283540049920
News 18 Tamil: https://tamil.news18.com/news/entertainment/the-medical-team-is-planning-to-perform-a-lung-transplant-on-spb-vin-343253.html
Dinakaran: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=615587
Malai Murasu: https://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=129816
SPB Charan Instagram Profile: https://www.instagram.com/p/CE9Pc6DhF-p/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
September 28, 2020
Ramkumar Kaliamurthy
August 25, 2020
Ramkumar Kaliamurthy
August 18, 2020