ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதுணைக் குடியரசுத் தலைவர் அவர்களின் மகள் எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணங்களை சரிசெய்ததாக வதந்தி

துணைக் குடியரசுத் தலைவர் அவர்களின் மகள் எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணங்களை சரிசெய்ததாக வதந்தி

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மருத்துவக் கட்டணங்களை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்களின் மகள் சரிசெய்தார் என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

Fact Check/Verification

பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முகங்களைக் கொண்டிருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள்.

கொரானாவில் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர் சிகிச்சையின் பலனாக அவர் கொரானாவிலிருந்து விடுபட்டார். ஆயினும் கொரானாக் காரணமாக அவர் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆகவே அதற்குரிய சிகிச்சை அவருக்குத் தரப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(25/09/2020) அன்று யாரும் எதிர்பாராதவிதமாக சிகிச்சைப் பலனின்றி எஸ்.பி.பி அவர்கள் இறைவனடிச் சேர்ந்தார்.  இச்செய்தி உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

திரையுலகினர் மட்டுமில்லாமல் இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இந்நிகழ்வுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்திருந்தனர். தமிழக அரசு காவல்துறை மரியாதையுடன் அவரின் உடலைஅடக்கம் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது வாட்சப்பில் எஸ்.பி.பி அவர்களைக் குறித்தச் செய்தி ஒன்று பரவி வருகிறது.

அச்செய்திகள் உங்கள் பார்வைக்காக:

இச்செய்தியைப்  பலரும் சமூகவலைத்தளைங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/menonmr1/status/1310244504490799104

உண்மை என்ன?

சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவலை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.

பரவி வரும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, இச்செய்திக் குறித்து கூகுளில் தேடினோம்.

அத்தேடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் அவர்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இச்செய்திக் குறித்து வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

அப்பதிவில் பரவி வரும் இச்செய்தியை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

அவ்வீடியோ உங்களுக்காக:

SPB சரண் அவர்களின் மறுப்பு வீடியோ. Source: SPB Charan’s facebook page

எஸ்.பி.பி அவர்கள் கொரானாக் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்து, அவர் குறித்த பல வதந்திகள் வந்தவண்ணம் இருந்தது.

முதலில், அவர் இறப்பதற்கு முன்பே இறந்ததாக ஒரு வதந்தி பரவியது. இதை நியூஸ் செக்கர் சார்பில் ஆராய்ந்து அதை பொய் என்று நிரூபித்திருந்தோம்.

அச்செய்தியைப் படிக்க: https://tamil.newschecker.in/coronavirus/sp-balasubramanyam-was-rumored-to-be-dead/

இரண்டாவதாக, அவருக்கு கொரானா குணமாவதற்கு முன்பே, கொரானா குணமாகியதாக செய்தி பரவியது. அதையும் ஆராய்ந்து பொய் என்று நிரூபித்திருந்தோம்.

அச்செய்தியைப் படிக்க: https://tamil.newschecker.in/coronavirus/did-spb-cure-from-corona/

மூன்றாவதாக, எஸ்.பி.பி அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக ஒரு வதந்திப் பரவியது. அதையும் ஆராய்ந்து பொய் என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

அச்செய்தியைப் படிக்க: https://tamil.newschecker.in/entertainment/is-sbp-going-to-have-a-lung-transplant/

இப்போது அவர் இறந்து விட்டார். இந்நிலையிலும் அவர் குறித்து இவ்வாறு ஒரு பொய்ச்செய்தி பரப்பப்படுகிறது. இச்செயலானது  மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமாகும்.

Conclusion

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மருத்துவக் கட்டணங்களில் பாக்கி இருந்ததால் அவரின் உடல் மருத்துமனை அவர்களின் நிர்வாகத்தால் தர மறுக்கப்பட்டது என்றும் அதன்பின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்களின் மகள் தலையிட்டு இப்பிரச்சனை சரிசெய்யப்பட்டது என்றும் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று நம் ஆய்வின் மூலம் தெளிவாகியுள்ளது.

Result: False


Our Sources

Twitter Profile: https://twitter.com/saisrini129/status/1310368654362509312

Twitter Profile: https://twitter.com/menonmr1/status/1310244504490799104

SPB Charan Facebook Profile: https://www.facebook.com/spcharanoffical/videos/322499532387614

Twitter Profile: https://twitter.com/vaibhavvabs/status/1310209392571158533


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular