Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகர் முகமது ரஃபியின் மகள், ஒரு இந்துப் பெண் போல உடை அணிந்துள்ளார்
Fact: வைரலாகும் வீடியோ தகவல் தவறானதாகும். வைரல் வீடியோவில் இடம்பெற்றிருப்பவர் கீதாஞ்சலி ராய் என்கிற பாடகி ஆவார்.
ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யும் பாடகர் முகமது ரஃபியின் மகள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யும் இந்த பெண் யார் தெரியுமா… ஆம் தெரிந்ததும் பெரிதும் வியப்படைவீர்கள். இவர் காலம்சென்ற, பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகர் முகமது ரஃபியின் மகள், ஒரு இந்துப் பெண் போல உடை அணிந்துள்ளார்… நமது பெண்கள் வெட்கப்படுகிறார்கள். ஃபேஷன் என்ற பெயரில் நமது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்கும் இந்துப் பெண்கள், இவரிடமிருந்து இதை கற்றுக்கொள்ள வேண்டியது, மிகவும் அவசியம்.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் கனடா வீடியோ!
ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யும் பாடகர் முகமது ரஃபியின் மகள் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், நமக்கு பக்திப்பாடகி கீதாஞ்சலி ராய் என்பவரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்த வீடியோ காட்சி நமக்குக் கிடைத்தது.
”Chinmay Mission organised a Beautiful Presentation of wonderful composition sung By Gitanjali Rai.” என்கிற தலைப்பில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. அதிலிருந்தே வைரல் வீடியோ வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கீதாஞ்சலி ராயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 11, 2019 அன்று கீதாஞ்சலி ராயின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் அவர் முகமது ரஃபியின் மகள், பேத்தி என்றெல்லாம் பரவிய வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: 1330 குறள்களையும் மனப்பாடமாக சொல்லும் மாணவர்களுக்கு ₹25000 பரிசாக அளிக்கின்றதா தமிழக அரசு?
ஹரிநாம சங்கீர்த்தனம் செய்யும் பாடகர் முகமது ரஃபியின் மகள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video from Gitanjali rai, Dated August 11, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)