ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkமத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் கனடா வீடியோ!

மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் கனடா வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மத்திய பிரதேசம் இந்தூர் பஸ் நிலையம். முழுமையாக திட்டம் போட்டு மக்களின் நன்மை, பயன் கருதி நிறுவப்பட்டது. அவசர கதியில் திறந்தது அல்ல

Fact: வைரலாகும் வீடியோ கனடா நாட்டின் Toronto நகரைச் சேர்ந்ததாகும்.

மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“மத்திய பிரதேசம் இந்தூர் பஸ் நிலையம். முழுமையாக திட்டம் போட்டு மக்களின் நன்மை, பயன் கருதி நிறுவப்பட்டது. அவசர கதியில் திறந்தது அல்ல.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

மத்திய பிரதேசம்
Screenshot from X @JaiRam92739628

Archived Link

Screenshot from X @praveen_kgl

Archived Link

Screenshot from Facebook/gkmoorthy50

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா டைம்ஸ் நவ்?

Fact Check/Verification

மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன்முடிவில், மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று வைரலாகும் வீடியோ கனடா நாட்டின் Toronto நகரில் எடுப்பட்டது என்பது நமக்கு தெரிய வந்தது.

கனடாவின் Ontario மாகாண அரசின் கீழ் Greater Toronto நகர போக்குவரத்தை நிர்வகிக்கும் Metrolinx நிறுவனம் கடந்த டிசம்பர் 04, 2020 அன்று தனது முகநூல் பக்கத்தில் தற்போது மத்திய பிரதேசம் என்று வைரலாகும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், “Your new Union Station Bus Terminal is ready! We’re excited to bring you a brand new bus terminal, opening tomorrow. This indoor hub makes it easier & safer to connect – and support the growth of – the region.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டொராண்டோ நகரில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் இது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Metrolinx இணையதளத்திலும் இதுகுறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.  மேலும், செய்திகளிலும் வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

மத்திய பிரதேசம் இந்தூர் பேருந்து நிலையம் என்று பரவும் வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from the Metrolinx, Dated December 04, 2020
Metrolinx Website


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular