Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நிவர் புயலால் புதுச்சேரி துறைமுகத்தில் பேரலை வருவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவெடுத்திருக்கிறது. இந்தப் புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் புயல் காரைக்காலுக்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கும் இடையே நாளை (26.11.2020) மதியம் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 28 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் சமூக வலைத்தளங்களில் நிவர் புயல் காரணமாக பல மீம்ஸ்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
அதில் ஒன்றாக, புதுச்சேரி துறைமுகத்தில் கடல்நீர் பொங்கி வருவது போல ஒரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோவானது, உண்மையில் நிவர் புயலில் எடுக்கப்பட்ட வீடியோவா என்பதை அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ உண்மையில் நிவர் புயலில் எடுக்கப்பட்டதா என்பதை அறிய, இவ்வீடியோக் குறித்து ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் இவ்வீடியோவானது பழைய வீடியோ என்பதை நம்மால் அறிய முடிந்தது. இதே வீடியோவையே கஜா புயலில் எடுக்கப்பட்டதென்றும், ஒகி புயலில் எடுக்கப்பட்டதென்றும் பகிரப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
கஜா புயலில் எடுக்கப்பட்ட வீடியோ என்று இவ்வீடியோ பரவியபோது…
ஓகி புயலில் எடுக்கப்பட்ட வீடியோ என்று இவ்வீடியோ பரவியபோது…
News Bugz எனும் இணையத் தளத்தில், Viral video claiming Pamban Bridge Sinked by Cyclone Gaja is Fake எனும் தலைப்பில் இவ்வீடியோ குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்பே உண்மை அறிதல் சோதனை செய்யப்பட்டிருந்ததையும் நம்மால் காண முடிந்தது.
மேலேயுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவானது நிவர் புயலில் எடுக்கப்பட்டது அல்ல என்பது பூரணமாக தெளிவாகிறது.
நிவர் புயலில் எடுக்கப்பட்ட வீடியோ என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வீடியோவானது உண்மையில் நிவர் புயலில் எடுக்கப்பட்டது அல்ல. இதை ஆதாரத்துடன் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் நிரூபித்துள்ளோம்.
Facebook Profile: https://www.facebook.com/groups/125592854777788/permalink/669147790422289
YouTube Video: https://www.youtube.com/watch?v=loNubkXb-L4
YouTube Video: https://www.youtube.com/watch?v=AQ9RoAwx5W8
Newsbugz.Com: https://www.newsbugz.com/viral-video-pamban-bridge-sinked-by-cyclone-gaja-is-fake/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
December 22, 2023
Vijayalakshmi Balasubramaniyan
February 18, 2021
Ramkumar Kaliamurthy
May 4, 2021