Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பிரபாகரனின் மறுஉருவம் என்று கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பேராசிரியர் கல்யாண சுந்தரம். இவருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியதால் இவர் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகினார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்த விலகிய இவர் அண்மையில் அளுங்கட்சியான அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்தப்பின் எடப்பாடி பழனிசாமி அவர்களை விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் மறுஉருவமாக இருக்கிறார் என்று இவர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவுவதுபோல் உண்மையிலேயே தமிழக முதல்வர் குறித்து இவ்வாறு ஒரு வார்த்தையை கல்யாண சுந்தரம் கூறினாரா என்பதை அறிய, இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
விடுதலைப் புலி அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இலங்கையில் தமிழீழ விடுதலையை முன்னிறுத்தி மிகவும் கடுமையாகப் போரிட்டவர்.
2009 ஆம் ஆண்ட இலங்கை அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் இவர் உயிரிழந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனாலும் இச்செய்தியை நம்பாமல் அவர் உயிரோடுதான் உள்ளார் என்று பலரும் இன்று வரை நம்பி வருகின்றனர்.
பிரபாகரன் அவர்களை தமிழ் தேசியத் தலைவர் என்று கூறி அவரை மானசீகத் தலைவராக ஏற்று அவர் வழியில் ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறி பலர் களப்பணி ஆற்றி வருகின்றனர். அவர்களுள் பேராசிரியர் கல்யாண சுந்தரமும் ஒருவர்.
ஆகையால் கல்யாண சுந்தரம் எடப்பாடி பழனிசாமி அவர்களை பிரபாகரனின் மறு உருவம் என்று கூறினார் என்று பரப்பப்படும் தகவல் ஏற்றுக்கொள்ளும்படியாகவோ, நம்பும்படியாகவோ நமக்கு தோன்றவில்லை.
ஆகவே அவர் இவ்வாறு கூறினாரா என்பதை அறிய இதுக்குறித்து தீவிரமாக தேடினோம்.
நம் தேடலில், கல்யாண சுந்தரம் அவர்கள் அதிமுகவில் இணைந்தப்பின், நேற்று (22/12/2020) பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வீடியோ ஒன்றை காண முடிந்தது.
அவ்வீடியோவில் கல்யாண சுந்தரம் அவர்கள்,
“ஒரு சாதரண சாமானியன் நம் நாட்டை ஆண்டுக்கொண்டு இருக்கின்றார். அவர் மிகப்பெரிய மக்கள் தலைவராக உருவெடுத்துள்ளார். மக்களின் முதல்வராக உயர்ந்துள்ளார்.”
என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் குறித்து பேசி இருப்பதைக் காண முடிகிறது.
ஆனால் எந்த ஒரு இடத்திலும் எடப்பாடி அவர்களை பிரபாகரன் அவர்களோடு தொடர்புப்படுத்தி அவர் பேசவே இல்லை.
இதன்படி பார்க்கையில் கல்யாண சுந்தரம் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பிரபாகரனின் மறுஉருவம் என்று கூறியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று என்பது நமக்கு தெளிவாகிறது.
வாசகர்களின் புரிதலுக்காக, பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ வாசகர்களின் பார்வைக்கு:
கல்யாண சுந்தரம் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பிரபாகரனின் மறுஉருவம் என்று கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Profile: https://twitter.com/Anthanan_Offl/status/1341427337410166785
Twitter Profile: https://twitter.com/maha2017jaya/status/1341322107720855554
Neerthirai: https://www.youtube.com/watch?v=N6sGMblEV1A
Twitter Profile: https://twitter.com/anthanyjose/status/1341108753932947457
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 7, 2025
Ramkumar Kaliamurthy
July 1, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 12, 2025