நடிகர் சூர்யா இஸ்லாமிய மதத்துக்கு மாறியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது.
Fact Check/Verification
சமீபத்தில் நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்த தனது நிலைப்பாட்டை ஒரு பதிவாக டிவிட்டரில் பகிர்ந்தார்.
இப்பதிவானது பாஜகவினரிடம் மிகப்பெரியக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் சூர்யாவுக்கு எதிராக பலரும் பலக் கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து வருகின்றனர்.
இதில் ஒன்றாக, நடிகை ஜோதிகா ஒரு இஸ்லாமியப் பெண் என்றும் அவரை மணப்பதற்காக இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும் தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆராய முடிவெடுத்தோம்.
உண்மை என்ன?
சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா என்பதை அறிய, இதுக்குறித்தச் செய்திகள் ஏதேனும் ஊடகங்களில் வந்துள்ளதா என்பதை ஆராய்ந்தோம்.
நம் தேடலில் 2017 ஆம் ஆண்டே இந்தச் செய்தி பரவியுள்ளது என்றும் அதை அப்போதே சூர்யாத் தரப்பிலிருந்து மறுக்கப்பட்டுள்ளது என்றச் செய்தியையும் காண முடிந்தது.
இச்செய்தி இந்து தமிழ், ஜீ நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்துள்ளது.


வைரலான வீடியோவின் பின்னணி:
சூர்யா அவர்கள் சிங்கம் 2 படப்பிடிப்புக்காக ஆந்திர மாநிலம் கடப்பாவில் படப்பிடிப்பில் இருக்கும்போது ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் கூறியதற்காக அங்குள்ள தர்காவில் சூர்யா தொழுகை செய்துள்ளார்.
அப்போது அந்த நிகழ்வு வீடியோ எடுக்கப்பட்டு, அவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிகழ்வுக் குறித்தத் தெளிவான விளக்கத்தை அப்போதே சூர்யாத் தரப்பிலிருந்து தரப்பட்டு விட்டது.
ஆனால் அரசியல் காரணங்களுக்காக மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்நிகழ்வு தூசித் தட்டி எடுக்கப்பட்டு, பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்பதை நம் ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.
Conclusion
நம் விரிவான ஆய்வுக்குப்பின் நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகியுள்ளது.
Result: False
Our Sources
Twitter Profile: https://twitter.com/YeskayOfficial/status/1168156077600329728
Twitter Profile: https://twitter.com/sridhar_says/status/1305719633861779456
Surya’s Twitter Profile: https://twitter.com/Suriya_offl/status/1305151857161981953
Hindu Tamil: https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/225200-.html
Twitter Profile: https://twitter.com/RajiniSampath/status/12863
Zee News: https://zeenews.india.com/tamil/movies/viral-video-actor-surya-converted-to-islam-293158
Facebook Profile: https://www.facebook.com/gmkarthigaiselvam/videos/1303932976362069
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)