பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜெயக்குமார் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் கட்சியில் இருந்து நான் விலகுகிறேன். புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவியின் வழியில் என் அரசியல் பயணம் தொடரும் அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயகுமார்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜெயக்குமார் என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் பாலிமர் நியூஸ் பெயரில் வெளியாகிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அப்போது, பரவிய நியூஸ்கார்ட் போலியானது என்று அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் தெளிவுபடுத்தியிருந்தனர்.

மேலும், அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இந்த செய்தி போலியானது என்று விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை; கே.டி.ராகவனைத்தான் சந்தித்தேன் என்றாரா சீமான்?
Conclusion
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜெயக்குமார் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post by Polimer News, dated April 12, 2025
Phone Conversation with, Kovai Sathyan, ADMK, Dated April 14, 2025