உத்திரபிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் கங்கை நதியில் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று பத்திரிக்கையாளர் செந்தில் வேல் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.

குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டில், “பத்திரிக்கையாளர் செந்தில் சபதம். உத்திரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய செல்கிறேன். பாஜகவை வீழ்த்தாமல் தமிழ்நாடு திரும்ப மாட்டேன். ஒரு வேலை பாஜக அங்கே மீண்டும் வெற்றி பெற்றா கங்கை நதியில் எனது உயிரை மாய்த்து கொள்வேன். இது என் தமிழ் மேல் ஆணை” என்று கூறியதாக வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அதிமுக – பாஜக கூட்டணி முறிவு? வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
Fact check/Verification
உத்திரபிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் கங்கை நதியின் என் உயிரை விடுவேன் என்று பத்திரிக்கையாளர் செந்தில் வேல் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, பத்திரிக்கையாளர் செந்தில் வேல் குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டு போலி என்பதாக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது நமக்குக் கிடைத்தது.
அதில் அவர், “அதெல்லாம் இருக்கட்டும். உபியில் மீதமிருக்கும் உங்க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களையாவது பிடித்து வைங்க. போகும் வேகத்தை பார்த்தால் யோகியே சமாஜ்வாதி கட்சியில் இணைந்தாலும் ஆச்சரியமில்லை” என்று பதிலளித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலி என்பதை தந்தி டிவி தரப்பிலும் உறுதி செய்து கொண்டோம்.
Conclusion
உத்திரபிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் கங்கை நதியின் என் உயிரை விடுவேன் என்று பத்திரிக்கையாளர் செந்தில் வேல் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)