Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுற்றது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நீட் தேர்வு ரத்து குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய அனைத்து கட்சி கூட்டம் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவுக்கு பாஜக தவிர்த்து, எதிர்க்கட்சியான அதிமுக உட்பட 12 கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே படிக்கலாம்.
இந்நிலையில், “நீட் தேர்வை எதிர்க்கும் அதிமுக, பாஜகவுடன் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும்? வரும் காலங்களில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read: நியாய விலைக் கடையில் பொருள் வாங்குவது ‘பிச்சை’ எடுப்பதற்கு சமம் என்றாரா சீமான்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுற்றது என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை பாலிமர் நியூஸ் வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் பாலிமர் நியூஸ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து பாலிமர் நியூஸின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்கள்,
“இது முற்றிலும் பொய்யான செய்தி. இந்த நியூஸ்கார்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துருவை (Font) நாங்கள் பயன்படுத்துவதே இல்லை.”
என்று விளக்கமளித்தனர்.
இதனையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். அவரும் இத்தகவல் பொய்யானது என்பதை உறுதி செய்தார்.
Also Read: சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம் என்றாரா அமைச்சர் சக்கரபாணி?
அதிமுக – பாஜக கூட்டணி முறிவுற்றது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
K.Annamalai, President, BJP Tamilnadu
Polimer News Editorial Team
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 12, 2025
Ramkumar Kaliamurthy
June 4, 2025
Ramkumar Kaliamurthy
June 2, 2025