வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஒரே பாலின திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்றாரா பாஜகவின் கல்யாணராமன்?

ஒரே பாலின திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்றாரா பாஜகவின் கல்யாணராமன்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஒரே பாலினத்தவரை திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்பதாக பாஜகவின் கல்யாணராமன் கூறியுள்ளதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஒரே
Source: Facebook

தமிழக பாஜகவில் அங்கம் வகிக்கும் கல்யாணராமன் எப்போதுமே பொதுவெளியில் பேசும் போது அவரது கருத்துக்கள் பல்வேறு வகையில் சர்ச்சைகளுக்கு உள்ளாவது வழக்கம்.

Also Read: பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா என்கிற பாடலை பாடியபடி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தாரா ஓபிஎஸ்?

இந்நிலையில், “ஒத்த பாலினத்தை திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து: பாஜக தடாலடி. இனி இந்துக்கள் ஆண் ஆண்களையும், பெண் பெண்களையும் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்களை பாஜக உண்மையான இந்துக்களாக அங்கீகரிக்காது” என்பதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஒரே
Source: Facebook

Facebook Link

ஒரே
Source: Facebook

Facebook Link

ஒரே
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification:

ஒரே பாலினத்தவரை திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்று பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

இதுபோன்ற ஒத்த பாலினத் திருமணம் குறித்த கருத்து எதனையும் கல்யாணராமன் சமீபத்தில் பகிர்ந்துள்ளாரா என்பதை அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆராய்ந்து பார்த்தோம். அதுபோன்ற பதிவுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

தொடர்ந்து, இதுகுறித்த உண்மையறிய கல்யாணராமனின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “கடந்த சில ஆண்டுகளாகவே இந்த போஸ்டர் வைரலாக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுபோன்ற பதிவுகளை நான் பொருட்படுத்துவதில்லை. இந்த தகவல் போலியானதாகும். நான் இதுபோன்று எந்தக் கருத்தையும் பேசவில்லை. ” என்று உறுதி செய்தார்.

Conclusion:

ஒரே பாலினத்தவரை திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்று பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

Kalyanraman BJP

Facebook

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular