பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா என்கிற பாடலைப் பாடியபடியே அதிமுக கட்சியினருடன் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழக சட்டப்பேரவையில் தங்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், “சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு. பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா? பயணம் போகும் பாதையில் திராட்சைக் கொடியை வளர்ப்பானா? என்ற பாடலைப் பாடியபடியே எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வெளிநடப்புச் செய்தார்” என்பதாக சன் செய்திகள் நியூஸ் கார்டு வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா என்கிற பாடலை பாடியபடி சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வெளிநடப்பு செய்ததாகப் பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டு குறித்து சன் நியூஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஆராய்ந்தபோது, இன்றைய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை என்பது நமக்கு உறுதியானது.
மேலும். “சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு. சட்டப்பேரவையில் இருந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு” என்று வெளியான நியூஸ் கார்டை வைத்தே இதுபோன்ற வைரல் கார்டை வெளியிட்டுள்ளனர் என்பது நமக்குத் தெரிய வந்தது.
இதுகுறித்து, சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் ஹெட் மனோஜிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறிப்பிட்ட அந்த வைரல் நியூஸ் கார்டு போலி என்று நமக்கு உறுதி செய்தார்.

உண்மையான நியூஸ் கார்டு

எடிட் செய்யப்பட்டது.
Conclusion:
பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா என்கிற பாடலை பாடியபடி சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வெளிநடப்பு செய்ததாகப் பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)