நடிகர் கார்த்தி, மற்றும் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், தங்கர்பச்சான் ஆகியோர் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி நியூஸ்கார்டுகள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை கொண்டு வந்தது. இம்மசோதாவுக்கு இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், தங்கர்பச்சான் ஆகியோர் இம்மசோதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாக கூறி நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், தங்கர்பச்சான் ஆகியோர் ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த நியூஸ்கார்டுகள் குறித்து தேடினோம்.
நம் தேடலில் வைரலாகும் இந்த நியூஸ்கார்டுகள் எடிட் செய்யப்பட்டவை என்பதை நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் இம்மூவரும் இந்த மசோதாவுக்கு எதிராகவே தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா குறித்து தங்கர் பச்சான் அவர்களின் கருத்து
இதுக்குறித்து வந்த செய்தி
இந்த நியூஸ்கார்டே எடிட் செய்யப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான புகைப்படமும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படமும் கீழே ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா குறித்து கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்த கருத்து
இதுக்குறித்து நியூஸ் 7 தமிழில் வந்த செய்தி
இந்த நியூஸ்கார்டே எடிட் செய்யப்பட்டுள்ளது. உண்மையான புகைப்படமும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படமும் கீழே ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா குறித்து நடிகர் கார்த்தி தெரிவித்த கருத்து
இதுக்குறித்து நியூஸ் 7 தமிழில் வந்த செய்தி
இந்த நியூஸ்கார்டே எடிட் செய்யப்பட்டுள்ளது. உண்மையான புகைப்படமும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படமும் கீழே ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

Conclusion
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், தங்கர்பச்சான் ஆகியோர் ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நியூஸ்கார்டுகள் போலியாக எடிட் செய்யப்பட்டவை என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Karthi’s Official Twitter Handle: https://twitter.com/Karthi_Offl/status/1410978812368547843
Karthik Subburaj’s Official Twitter Handle: https://twitter.com/karthiksubbaraj/status/1410873977438752768
Thangar Bachan Interview: https://www.facebook.com/SunNewsTamil/videos/3236561213237703/
News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1411009087022583810
Sun News: https://twitter.com/sunnewstamil/status/1412005648544370690
News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1410990677836455936
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)