ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் திரையுலகை விட்டு விலகுவேன் என்று இயக்குனர் சீனுராமசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஒளிபரப்பு திருத்த மசோதாவை கடந்த 18-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலை, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சீனுராமசாமி அவர்கள், “ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு தடை செய்யாவிட்டால் நான் திரியுலகை விட்டே விலகுவேன்; என்னைப் போல் பல இயக்குனர்களும், நடிகர்களும் திரைத்துறையை விட்டே விலகுவர்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே விலகுவேன் என்றாரா சூர்யா?
Fact Check/Verification
ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே முற்றிலும் விலகுவேன் என்று சீனுராமசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.
இயக்குநர் சீனுராமசாமி ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக தனது நிலைப்பாட்டை அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவாக பதிவிட்டிருந்தார். அப்பதிவில்,
தணிக்கை செய்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தை அரசியல் காரணங்களை கூறி மறுதணிக்கை செய்கிறோம் என்று அத்திரைப்படத்தையே முடக்கும் அபாயம் இருக்கிறது ஆகவே #ஒளிப்பதிவுசட்டவரைவு மசோதாவில் ‘மறுதணிக்கை’ எனும் சரத்தை நீக்கவேண்டும்
என குறிப்பிட்டிருந்தார்.
சீனுராமசாமியின் இந்த டிவீட் குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள நியூஸ்கார்டை எடிட் செய்தே ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் திரையுலகை விட்டு விலகுவேன் என்று சீனுராமசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்றாரா பிரகாஷ் ராஜ்?
Conclusion
ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் திரையுலகை விட்டு விலகுவேன் என்று இயக்குனர் சீனுராமசாமி கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Seenu Ramaswamy Official Twitter Handle: https://twitter.com/seenuramasamy/status/1410987763525054475
News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1411019402145722370
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)