Fact Check
TVK Karur stampede: கரூர் கூட்ட நெரிசலில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானதால் அங்கு தவெக கட்சி கலைக்கப்பட்டதா?
Claim
கரூரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி பலியானதால் அங்கு தவெக கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டது.
Fact
வைரலாகும் வீடியோ கடந்த ஜூன் மாதம் முதலே ஊடகங்களில் இடம்பெற்றுள்ளது. கரூர் நிகழ்வுடன் தொடர்புடையது அல்ல.
கரூரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானதால் அங்கு தவெக கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலியானதை தொடர்ந்து ,அந்த கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த TVK கட்சியும் கலைக்கட்டது.கொடிக்கம்பமும் சாய்க்கப்பட்டது.
இதுக்கும் திமுக தான் காரணமாடா கூந்தல் பசங்களே” என்று இந்த வீடியோ பரவுகிறது.



X Link/Archived Link
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாரா விஜய்?
Fact Check/Verification
கரூரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி பலியானதால் அங்கு தவெக கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூன் 26, 2025 அன்று ABP Nadu வெளியிட்டிருந்த இந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், ”JCB வைத்து இடித்து தள்ளப்பட்ட தவெக கொடி கம்பம்” என்று இந்த வீடியோ செய்தி இடம்பெற்றிருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து செய்திகள் எதுவும் நமக்குத் தெளிவாக கிடைக்கவில்லை என்றாலும் கடந்த ஜூன் மாதமே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது என்பதும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துடன் இந்த வீடியோவிற்கு தொடர்பில்லை என்பது நமக்கு உறுதியாகிறது.
Also Read: கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடினரா?
Conclusion
கரூரில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி பலியானதால் அங்கு தவெக கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, ABP Nadu, Dated June 26, 2025
Facebook Post From, Trend Glitz, Dated June 26, 2025