Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கவின் கொல்லப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு தேர்தல் வரை தடை கோரினாரா சி.வி.சண்முகம்?
நெல்லை ஐடி ஊழியர் கவின் கொல்லப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் கடந்த ஆண்டு ஜூலையில் ஆந்திர பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் நடந்தது என தெரிய வந்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தில் ஜூலை 18, 2024 அன்று அச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சேக் ரஷீத் என்பவரை தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஷேக் ஜிலானி என்பவன் நடுசாலையில் வைத்து வெட்டியதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் ஆந்திராவில் நடந்ததாக கூறி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
Also Read: 12 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்தவனை கத்தியால் குத்திய அண்ணன்; வைரலாகும் தகவல் உண்மையானதா?
இதனடிப்படையில் பார்க்கையில் ஆந்திராவில் சென்ற வருடம் நடந்த சம்பவத்தின் வீடியோவை ஐடி ஊழியர் கவினின் கொலையோடு தொடர்புப்படுத்தி தவறான தகவல் பரப்பப்படுகின்றது என தெளிவாகின்றது.
Sources
Report by Times of India, dated July 18, 2024
Report by The Indian Express, dated July 18, 2024
Report by The Hindu, dated July 18, 2024
Report by India Today, dated July 18, 2024