“தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பை தொட்டியா? தமிழக அரசு என்ன செய்துகொண்டுயிருக்கிறது” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அவ்வீடியோவில் கப்பல் ஒன்றிலிருந்து குப்பை மற்றும் கழிவுகள் நீர்நிலையில் கலப்பதாய் இருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
தமிழக எல்லையில் கேரளாவின் குப்பைகள் கொட்டப்படுவதாக பரப்பபடும் வீடியோவில் ‘Ali Aboutine’ என்கிற வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் Ali Aboutine எனும் பெயருடைய ஏஐ கலைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே வீடியோ ஏப்ரல் 1, 2025 அன்று பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.

அதில் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது. இதுத்தவிர்த்து இவ்வீடியோ எங்கே, எப்படி எடுக்கப்பட்டது / உருவாக்கப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் அதில் இடம்பெற்றிருக்கவில்லை.
தொடர்ந்து தேடியதில் அவரின் யூடியூப் பக்கத்திலும் இதே வீடியோ பதிவேற்றப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவின் டிஸ்கிரிப்ஷனில் இவ்வீடியோ டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என தெளிவாகின்றது.
Also Read: நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை; கே.டி.ராகவனைத்தான் சந்தித்தேன் என்றாரா சீமான்?
Conclusion
தமிழக எல்லையில் கேரளாவின் குப்பைகள் கொட்டப்படுவதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post By Ali Aboutine, AI Artist, Dated April 1, 2025
YouTube Video By Ali Aboutine, AI Artist, Dated April 1, 2025
Self Analysis