Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: கோவை சுயமரியாதை வானவில் பேரணி புகைப்படம்
Fact: வைரலாகும் புகைப்படம் கொல்கத்தா பேரணியைச் சேர்ந்ததாகும்.
கோவை சுயமரியாதை வானவில் பேரணியில் இளைஞர் ஒருவர் அணிந்துவந்த மெல்லிய உடை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இது தான் சுயமரியாதை பேரணியா ? ஒரு நல்ல துணி உடுத்தி போக கூடாதா…? இந்த கருமத்துக்கு தான் நீங்க ஆதரவா” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது. அதன் கீழே கோவை, தமிழகம் என்று பலரும் இதுகுறித்து விமர்சித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தினால் கட்டணம் விதிக்க உள்ளதா டிராய்?
கோவை சுயமரியாதை வானவில் பேரணியில் இளைஞர் ஒருவர் அணிந்துவந்த மெல்லிய உடை என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜனவரி 2024 அன்று gaylaxymag என்கிற சமூக வலைத்தள ஊடகப்பக்கத்தில் ”What’s your taste in men?” என்று இடம்பெற்றிருந்த கொல்கத்தா LGBT பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இடம்பெற்றிருந்தன. அதில், தற்போது கோவை என்று பரவி வருகின்ற நபரின் வீடியோவும் இடம்பெற்றிருந்தது.
அதுமட்டுமின்றி, கடந்த டிசம்பர் 2023 அன்று lgbtkolkata என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் Kolkata Pride Walk 2023 என்று வெளியாகியிருந்த புகைப்படங்களில் வைரலாகும் படத்தில் உள்ள நபரின் மற்றொரு புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
இதன்மூலம், கோவை வானவில் பேரணியில் இடம்பெற்ற புகைப்படம் என்று பரவும் படம் கொல்கத்தா பேரணியில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
Also Read: இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தவறான வீடியோ!
கோவை சுயமரியாதை வானவில் பேரணியில் இளைஞர் ஒருவர் அணிந்துவந்த மெல்லிய உடை என்று பரவும் புகைப்படம் கொல்கத்தா பேரணியில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Instagram Post from, gaylaxymag, Dated January 05, 2024
Instagram Post From, lgbtkolkata, Dated December 18, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
May 17, 2024
Ramkumar Kaliamurthy
May 22, 2023
Ramkumar Kaliamurthy
September 9, 2022